ஜூலை 23 ராசி பலன்
*🕉️மேஷம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : பெருமை உண்டாகும்.
பரணி : புத்துணர்ச்சி பிறக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
—————————————
*🕉️ரிஷபம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : செலவுகள் உண்டாகலாம்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்தியை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : ஒற்றுமை மேலோங்கும்.
திருவாதிரை : நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.
—————————————
*🕉️கடகம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும். சிலருக்கு எதிர்பாராத உபரி வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️சிம்மம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். எதிர்காலம் சம்பந்தமான துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
—————————————
*🕉️கன்னி*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையை தரும். ஒரு சில சமூக நிகழ்வுகள் மனதை பாதிக்கலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகன பயணங்களில் மிதவேகத்தை பின்பற்றவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : நம்பிக்கை உண்டாகும்.
சித்திரை : கவனம் தேவை.
—————————————
*🕉️துலாம்*
ஜூலை 23 ராசி பலன்
ஆடி 08 – வியாழன்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சுவாதி : ஆதரவு பெருகும்.
விசாகம் : திருப்தியான நாள்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஜூலை 23, 2020
ஆடி 08 – வியாழன்
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : மகிழ்ச்சி பெருகும்.
அனுஷம் : இன்னல்கள் குறையும்.
கேட்டை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
—————————————
*🕉️தனுசு*
ஜூலை 23, 2020
ஆடி 08 – வியாழன்
தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : மனக்கசப்புகள் நீங்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*
ஜூலை 23, 2020
ஆடி 08 – வியாழன்
எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். திடீர் கோபத்தினால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செய்யும் காரியங்களால் வீண்பழி ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : செலவுகள் ஏற்படலாம்.
திருவோணம் : வேறுபாடுகள் தோன்றும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️கும்பம்*
ஜூலை 23, 2020
ஆடி 08 – வியாழன்
மனதில் தான, தர்மம் செய்யவும், ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் எண்ணங்கள் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மனக்குழப்பங்கள் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : மனக்குழப்பங்கள் நீங்கும்.
—————————————
*🕉️மீனம்*
ஜூலை 23, 2020
ஆடி 08 – வியாழன்
பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உண்டாகலாம். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.