டிசம்பர் 03 ராசி பலன்

🕉️மேஷம்*
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். திறமைகள் மற்றும் உழைப்பிற்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான திட்டங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : எண்ணங்கள் நிறைவேறும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்புகள் உயரும். விருப்பமானவர்களின் சந்திப்பு ஏற்படும். அனுபவப்பூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : மதிப்புகள் உயரும்.
மிருகசீரிஷம் : அறிவு மேம்படும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

நண்பர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.


🕉️கடகம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இலக்கியம், கதை மற்றும் கவிதைத்துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்படவும். சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : மாற்றமான நாள்.


🕉️கன்னி
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் தோன்றும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் மனதில் தோன்றும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : துணிச்சல் மேம்படும்.


🕉️துலாம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணவரவுகள் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : வெற்றி உண்டாகும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

பங்குதாரர்களின் மூலம் சில பிரச்சனைகள் நேரிடலாம். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். எந்தவொரு முடிவுகளையும் எடுக்கும் முன் ஆலோசனைகள் செய்வது நல்லது. புத்திரர்களின் வழியில் அலைச்சல்கள் மேம்படும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : இன்னல்கள் உண்டாகும்.
அனுஷம் : காலதாமதம் ஏற்படலாம்.
கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.


🕉️தனுசு
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடைபெறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : இடமாற்றங்கள் உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வீண் செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். நெருக்கமானவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : நன்மை உண்டாகும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கும்பம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

குடும்பத்தினரிடம் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அமைதியாக செல்ல வேண்டும். குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகளும், மகிழ்ச்சியும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழல் ஏற்படும். சொத்துக்களால் கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : அமைதி வேண்டும்.
சதயம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.


🕉️மீனம்
டிசம்பர் 03, 2020
கார்த்திகை 18 – வியாழன்

தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், கீர்த்தியும் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : பதவிகள் கிடைக்கும்.
ரேவதி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

About Author