மேஷம்
தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : தெளிவு பிறக்கும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். வாக்குவன்மையால் தொழிலில் இலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
மிதுனம்
பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும். எதிர் வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் நுட்பமான விஷயங்களை அறிவீர்கள். மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
கடகம்
சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். புதிய யுக்திகளை பயின்று கையாளுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : விவாதங்கள் மறையும்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.
சிம்மம்
செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : வேகம் அதிகரிக்கும்.
பூரம் : வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.
கன்னி
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான பயணங்கள் மற்றும் கோப்புகளில் கவனம் வேண்டும். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : கவனம் வேண்டும்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கை மற்றும் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சுவாதி : அனுகூலம் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய்மாமன் உறவுகளிடம் நிதானத்துடன் இருக்கவும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும். தேவையற்ற எண்ணங்களின் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். எடுத்த செயல்களை முடிப்பதில் பல இடர்பாடுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : குழப்பமான நாள்.
தனுசு
தொழில் முனைவோருக்கு கூடுதல் பணிகள் உண்டாகும். நண்பர்களுடன் கூடி பேசி மனம் மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகள் சாதகமாக அமையும். மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எண்ணங்களில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மனம் மகிழ்வீர்கள்.
பூராடம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
மகரம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகையை மறந்து நட்பு கொள்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : நட்பு கொள்வீர்கள்.
கும்பம்
பிள்ளைகளின் மூலம் தொழிலில் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : தனவரவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
மீனம்
தாய்வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.