அடுத்து பூக்களால அர்ச்சனை. இருங்க இருங்க, “சந்தனம் மேலே குங்குமம் என்ன ஆச்சு?” ன்னு நீங்க குரல் எழுப்பறது காதில விழுது. இந்த 16 ல அது இல்லை. பெரும்பாலான பூஜா கல்பங்களில உபசாரங்கள் ஒவ்வொண்ணுத்துக்கும் ஸ்லோகங்கள் இருந்தாலும் இதுக்கு அப்படி இல்லை. அதனால் இது பிற்சேர்க்கைன்னு நினைக்க வேண்டி இருக்கு.
வழக்கிலே குங்குமம் இடுவது இருக்கவே இருக்கு. ஆகவே பூக்களால் அர்ச்சனை. ஒவ்வொரு ஸ்வாமிக்கும் நாமக்கள் இருக்கு. கல்பத்தில 8 சொல்லி அர்ச்சனை ன்னு சொல்லி இருக்காம். வழக்கம் வேறயா இருக்கு.
பக்தி மேலீட்டால 108, 1008, ன்னு வளர்த்தி இருக்காங்க. தப்பில்லை. குறைச்சலான அர்ச்சனையா இருந்தா வருத்தப்பட வேண்டாம்ன்னு சொல்ல வரேன். இந்த நாமாக்கள் எல்லாம் புராணங்களிலேந்து எடுக்கப்பட்டு இருக்கு. அதனால் இதுக்கு ஒரு மகத்துவம் இருக்கு. சம்ஸ்க்ருத பெயர்களா இருக்கேன்னு யோசிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் அபிமானிகள் தமிழ் மறைகளா கருதற நூல்களில் இருந்து எடுத்து தொகுத்து அர்ச்சனை செய்யலாம். கடவுள் நிச்சயம் ஏத்துப்பார்.