மங்களாக்ஷதை எடுத்துக்கொண்டு நெற்றியில் குட்டிக்கொண்டி சுக்லாம்பரதரம் என துவங்கும் ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
பின் ப்ராணாயாமம்.
பின் இடது கையை வலது துடை மேல் வைத்துக்கொண்டு வலது கையை அதன் மேலே வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்ய வேண்டும்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஸ்²வரப்ரீத்யர்த²ம்ʼ, அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே⁴ ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³ ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரதக்கண்டே மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரப⁴வாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே …நாம ஸம்ʼவத்ஸரே …அயனே …ருʼதௌ …மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² …வாஸரயுக்தாயாம்ʼ …நக்ஷத்ரயுக்தாயாம்ʼ …யோக³…கரணயுக்தாயாம் ஏவங்கு³ண விஸே²ஷண விஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² என்ற ரீதியில் இது போகும்.
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
சங்கல்பத்தில் எந்த கால கட்டத்தில், எந்த இடத்தில் இருந்து கொண்டு எதற்காக பூஜை செய்கிறோம் என்று தெளிவாக நினைவுறுத்திக் கொள்கிறோம்.
மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீபரமேஸ்²வரப்ரீத்யர்த²ம்ʼ= என்னால் அடையப்பட்ட எல்லா பாபங்களும் அழியவும், பரமேஶ்வரனை திருப்தி செய்யும் பொருட்டும்;
அத்³ய ப்³ரஹ்மண: த்³விதீயபரார்தே⁴ :
இப்போதுள்ள ப்ரம்ஹாவின் இரண்டாம் பரா வில்:
அதாவது, அனைத்துலகையும் ஸ்ருஷ்டித்து இரண்டு பரார்த்தகாலம் ஜீவிப்பவர் ப்ரஹ்மா. (நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் 4320000 வருடங்கள், ஆயிரம் சதுர்யுகம் பகலும், ஆயிரம் சதுர்யுகம் இரவும் கொண்டது ப்ரஹ்மாவின் ஒரு நாள், அத்தகைய 360 நாட்கள் அடங்கியது அவரது ஒரு வருடம், அத்தகைய நூறுவருடம் அவரது ஆயுட்காலம், இதுவே பரம் எனப்படும், இதில் பாதி பரார்த்தம், ஆக அவர் இரண்டு பரார்த்தம் ஜீவிக்கிறார்.) அவரது இரண்டாவது பரார்த்தத்தில்…
ஸ்வேத வராஹ கல்பே…
இப்போதுள்ள கல்பம் ஸ்வேத வராஹ கல்பம். மற்றது எது? க்ருஷ்ண வராஹ கல்பம்.
வைவஸ்வதமன்வந்தரே,…..
இப்போது ஆட்சியில் உள்ள மனு வைவஸ்வத மனு. ஸ்வாயம்புவர் ஸ்வாரோசிஷர் உத்தமர் தாமஸர் ரைவதர் சாக்ஷுஷர் என்ற ஆறு மனுக்களின் காலம் தாண்டியபின் ஏழாவதான வைவஸ்வத மனுவின் காலத்தில் இருக்கிறோம்.