நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று உத்திரம்
கையாத உரையன் முன்கை வலியன்
வித்தையுளன் அழகாம் கண்வாயுளன்
மையார் கண்ணார் நேயன் முன்கோபி
மறுமுக மார்பு அதனில் உள்ளோன்
பொய்யாத சூரன் நீராடுவான் சிறு
பசியன் பொருந்தும் பத்தி
ஒய்யார நடை தரும் மன்ஞான வானாகும்
உத்திரத்தினானே
வஞ்ச நெஞ்சமில்லாமல் இதமாகப் பேசுகின்றவர்,
முன் கை வலிமையாக இருக்கும்.
கல்வி நிறைய கற்றிருப்பர்,
அழகான கண்களும் வாயும் உடையவர்,
அழகான பெண்களிடம் அன்பு கொண்டாடுபவர்,
முன் கோபம் உண்டு.
முகத்தில் மார்பில் மச்சம் இருக்கும்.
நிஜமான திறமைசாலி, நீராடும் நாட்டம் இருக்கும்.
சிறு தீனி விருப்பம் இருக்கும்.
நடை அழகாக இருக்கும்,
கொடை நிறைய செய்வார்.
கொஞ்சம் ஞானி டைப்
9840656627