இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று மூலம் நட்சத்திரம்
மண்டியநித் திரைப்பிரியன் புறந்தாளுன்னதாம்வழுவாமல்
செய்கருமம் செய்பத்தி மானாம்திண்டிறல் ஆயுதந்தன்னால்
சீவனஞ்செய்திடுவான்திகழ்தந்தை தாய்க்கினியன் சிறந்த
தவசீலன்கண்ட சிறுதின்றிதின்னப் பிரியவான் லோபிகண்
சிறுகச் சிவந்திருக்குங் கல்விமானாகும்மிண்டுகளே
செய்திடுவான் உறவினரைச் சேரான்முன்கோபி கொடியனாகும்
மூலத்தானே
1. உறக்கத்தில் பிரியம் உள்ளவர்கள்
2. பாதத்தின் மேல் பகுதி வளைந்து உயர்ந்து காணப்படும்
3. ஒரு வேலை கொடுத்தால் அதை சரியாகவும் குறைவு இல்லாமல் முடித்துக் கொடுப்பார்கள்
4. வலிமையான ஆயுதங்களைக் கையாளத் தெரிந்தவராக இருப்பர்
5. பெற்றோரை மதிப்பார்கள்
6. மேன்மையான பழக்க வழக்கங்கள் இருக்கும்
7. சிறுதீனிகளை ரசித்துப் பார்ப்பார்கள் உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆவலும் கொண்டவர்கள். அதுவும் விடாமல் சாப்பிடுவார்கள்
8, சிவந்த கண்கள்
9. சுற்றம் சொந்தத்தோடு கூடி வாழ்வதில் கொஞ்சம் தயக்கம் இருக்கும்
10 முன் கோபம் நிறைய இருக்கும். டக்கென்று முடிவெடுத்துவிடுவார்கள் ஆனால் உடனே அதை ஆராயவும் செய்வார்கள்
9840656627
இதற்கு முந்தைய நட்சத்திரம் கேட்டை