இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று திருவோணம் நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்
தக்கதோர் கல்விமானொரு போக்கன்சற்றினில் கோபம்
ஆறிடுவன்பக்கமும் முன்பின் பார்த்துமே நடப்பன்பதிவுளங்
காலுயர்ந்திருக்கும்மைக் கண்ணார்க்கு இனியன் பரிமளப்
பிரியன்மயிர் முடி அழகன் உற்சாகன்சிக்கனவானாம்
ஏற்பவர்க்கு ஈய்வான்திகழ்திரு வோணநா ளானே
1. உயர்ந்த கல்வி கொண்டவர்கள்
2. தனக்கு என தனி போக்கு கொண்டவர்கள்
3. கொஞ்சம் கோபம் வரும். ஆனால் உடனே விட்டுவிடுவார்கள்
4. ஒரு சிக்கல் என வந்தால் அவரசப்படாமல் நான்கும் ஆராயந்து செயலாற்றுவார்கள்
5. உள்ளங்கால் உயர்ந்து இருக்கும்
6. ஆண்கள் பெண்களுக்கு இனிமையானவர்களாக இருப்பர்
7 வாசனை திரவிய ஆசை உண்டு
8. கேசம் அழகாக இருக்கும்
9. எதையாவது முயற்சி செய்யும் போது உற்சாகமாகச் செய்வார்கள்
10. சிக்கனமானவர்கள்
11. இரக்க சுபாவம் அதிகம்
9840656627