நட்சத்திர பொது குணங்கள் பூசம்

நட்சத்திர பொது குணங்கள்: இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகளைக் குறித்து வரிசையாக எழுதி வருகிறேன்


குறிப்பு : இது ஜாதக அலங்காரம் எனும் 17 ம் நூற்றாண்டு ஜோதிட நூலில் காணப்படும் செய்யுளைச் சார்ந்தும் அந்த ஜோதிஷ நூலில் காணப்படும் ஏனைய குறிப்புகளைக் கொண்டும் எழுதுகிறேன். இதில் விதி விலக்குகள் இருக்கலாம்.


அது மட்டுமல்ல ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாவத்திற்கும் தனித் தனியே செய்யுள்கள் அந்த ஜோதிஷ நூலில் உள்ளன‌

வரிசையில் இன்று பூச நட்சத்திரம்

வாசி யுடையவன் வழக்கை உரைத்திடுகள்
வன்குத்ர வசன முள்ளன்
நேசமுடன் மாதாவை தந்தையருட்
சித்திடுவன் நெடிய ரூபன்
தேக ஒழுக்கம் தனவான் கண் மூக்கு அழகன்
பசி பொறான் திகழும் சாந்தம்
பூசி முடிக்கப் பிரியன் குணவான்
பாக்கியமுளன் பூசத்தினானே


வழக்கு உரைப்பதில் வல்லவர்கள். தங்களின் தரப்பை நிதானமாகவும் தெளிவாகவும் எடுத்து வாதம் செய்வதில் சிறப்பானவர்கள்

கள்ள மனமும், வஞ்சக சொற்களைக் கையாள்வார்கள்

உடல்வாகு அழகானதாக இருக்கும்

ஆசாரமானவர்

செல்வந்தர். மூக்கு கண் இரண்டும் மிக அழகாக இருக்கும்

பசி பொறுக்க மாட்டார்கள்

சாந்தம் இருக்கும். நறுமணப் பொருட்கள் மீது நாட்டம் இருக்கும்

பூச நட்சத்திரத்தினர் குறித்து யவன ஜாதகம் சொல்வதைக் காண்போம்

காம எண்ணம் மேலோங்கியவர். பல சாஸ்த்திரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர், புத்தி தெளிவானவர்

இதையே தான் ப்ருஹத் ஜாதகமும் சொல்கிறது.

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம்

About Author