நவம்பர் 14 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான நபர்களின் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கிருத்திகை : இன்னல்கள் நீங்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


🕉️மிதுனம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.


🕉️கடகம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

தாயின் மீது அன்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த தொழில் தொடர்பான செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிதானமான வாதங்களின் மூலம் காரியவெற்றி உண்டாகும். மனை விற்பனையால் இலாபம் கிடைக்கும். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.


🕉️கன்னி
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் சில நுட்பங்களை அறிவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : நுட்பங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மனவருத்தங்கள் நீங்கும்.


🕉️துலாம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சுக்களில் அனுபவ அறிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : அறிவு மேம்படும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

குடும்பத்தினருடன் விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வாகனப் பழுதுகளை சரி செய்வதற்கான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.
கேட்டை : தீர்வு கிடைக்கும்.


🕉️தனுசு
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

சிலருக்கு மலைப்பிரதேச பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கமான நபர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பொருட்களின் மூலம் வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : பயணங்கள் சாதகமாகும்.
பூராடம் : வரவுகள் மேம்படும்.
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.


🕉️மகரம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
திருவோணம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.


🕉️கும்பம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : பெருமை கிடைக்கும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️மீனம்
நவம்பர் 14, 2020
ஐப்பசி 29 – சனி

செய்யும் பணியில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மறைமுகமான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : பிரச்சனைகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : காலதாமதம் உண்டாகும்.

About Author