நவம்பர் 21 ராசி பலன்

🕉️மேஷம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

பொறுப்புகளை ஏற்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பொருள் வரவு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் பகையை விடுத்து நட்புடன் பழகுவது உறவினை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.

பரணி : தீர்வு கிடைக்கும்.

கிருத்திகை : நட்புடன் பழகவும்.

🕉️ரிஷபம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிலுவையில் இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். மனைவிவழி உறவினர்களின் மூலம் ஆதரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.

ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

🕉️மிதுனம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

புனர்பூசம் : சோர்வு ஏற்படும்.

🕉️கடகம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

புதிய தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான பலன்கள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளும், அதற்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூசம் : ஆதரவான நாள்.

ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்.

🕉️சிம்மம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : செல்வாக்கு மேம்படும்.

பூரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

🕉️கன்னி

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் தோன்றும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.

சித்திரை : முன்னேற்றமான நாள்.

🕉️துலாம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பாகப்பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் இழுபறியான வேலைகள் நிறைவடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : அறிவு வெளிப்படும்.

சுவாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.

விசாகம் : இழுபறிகள் நீங்கும்.

🕉️விருச்சகம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது பொறுமை வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஒற்றுமை உண்டாகும்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

🕉️தனுசு

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புத்திரர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : புரிதல் உண்டாகும்.

பூராடம் : சுபவிரயங்கள் ஏற்படும்.

உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.

🕉️மகரம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

செய்யும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : வசதிகள் மேம்படும்.

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

🕉️கும்பம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

சகோதரர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

🕉️மீனம்

நவம்பர் 21, 2020

கார்த்திகை 06 – சனி

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். மனதில் ஆரோக்கியமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட நிறம் : 7

அதிர்ஷ்ட எண் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நட்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் தோன்றும்.

ரேவதி : திருப்திகரமான நாள்

About Author