புதாஷ்டமி புண்யகாலம்

புதாஷ்டமி புண்யகாலம் 02 – 06 – 2021

अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह ।
चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाऽष्टमी ।
चतस्र स्तिथयस्त्वेताः सूर्य ग्रहण सन्निभाः ।౹

அமாவாஸ்யாது ஸோமேந ஸப்தமீ பாநுநாஸஹ ।
சதுர்த்தீ பூமிபுத்ரேண ஸோமபுத்ரேண சாஷ்டமி ।
சதஸ்ரஸ் திதயஸ் த்வேதா : ஸுர்யக்ரஹண ஸந்நிபா : ।।

திங்கட்கிழமையும் அமாவாசை திதியும் ,

ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் ,

செவ்வாய்கிழமை சதுர்த்தி திதியும் ,

புதன் கிழமை அஷ்டமி திதியும் ,

இந்த நான்கு திதிகளும் கிழமைகளும் ஒன்று சேரும் நாள் ஸூர்ய க்ரஹண நாளுக்கு ஸமமான புண்யகாலம்.

அதன்படி நாளை புதாஷ்டமி புண்யகாலம் , இந்த நாள் ஸூரிய க்ரஹண நாளுக்குத் துல்லியமானது ,

அதாவது இன்று காலையில் நாம் செய்யும் புண்ய நதி ஸ்னானங்கள், பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள், நாமஸங்கீர்தனங்கள், போன்றவை ஸாதாரண நாட்களில் செய்வதில் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் ஸுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை , ஆகையால் இது போன்ற மஹோன்னதமான புண்யகாலங்களை நல்லபடியாக பயன்படுத்தி இஹபர ஸௌக்யங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்.

About Author