ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
மிதுன மாத (ஆனி மாத) ராசி பலன்கள் (15.06.2020 முதல் 15.07.2020 வரை) கிரஹ நிலைகள் 14.06.2020 இரவு 11.22 மணிக்கு சூரியன் மிதுன ராசிக்கு 14.06.2020 இரவு 11.22 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மேஷ ராசி(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம்பாதம்முடிய)
ராசியதிபதி 11ல், 3ல் சூரியன், ராகு, நல்ல பலன்களை அள்ளித்தருகின்றனர். பணவரவு ஏற்படும். சூரியனால் வியாதிகள் குறையும் சுறுசுறுப்பு உற்சாகம் ஏற்படும், நினைத்தகாரியம் வெற்றி அடையும் உத்தியோகம், தொழில், விவசாயம், அனைத்து தொழில்களும் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாயால் பகைவர்களை வெல்லும் திறன் உண்டாகும். சிலருக்கு அதிகார பதவி கிடைக்கும். சமூகத்தில் கவுரவம் ஏற்படும். புதன் கொஞ்சம் உறவுகளுடன் மோதலை தருவார். பகைவர்களால் தொல்லை வரும். பத்தில் இருக்கும் குருபகவான் தொழிலில் ஒரு மாற்றத்தை செய்வார் ஆனாலும் பார்வையால் நன்மை தருவார். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாயு, பித்தம் சம்பந்தமான வியாதியால் அவதிப்படுவர். 2ல் சுக்ரன் ஆட்சி அதனால் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெரியபாதிப்புகள் இருக்காது. பத்தில் சனிபகவான் ஆட்சி உத்தியோக வகையில் மேலதிகாரிகள் பாராட்டுகள் கிடைக்கும். ஆனால் ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதில் சிரமம் இருக்கும். 3ல் ராகு புகழை தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தன ஆதாயம் நடக்கும். கேது 9ல் விரயம் இருக்கும். எதிலும் தாமதம் இருக்கும். பொதுவில் அனைத்து பிரிவினருக்கும் நன்மை அதிகமும் சிரமம் குறைவாக இருக்கும் மாதம் இது. மாணவர்கள் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். பெண்கள் உறவினர்கள் மற்றும் மேல் அதிகாரிகளிடம் அதிகம் வாய் பேச கூடாது. மற்றபடி எல்லோருக்கும் நன்மை தரும் மாதம்.
சந்திராஷ்டமம் : அஸ்வினி – ஜூலை 2, பரணி – ஜூலை 3, க்ருத்திகை – ஜூலை 4
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சிவன் கோவிலில் தீபம் ஏற்றுங்கள். நலிவடைந்த கோவில்களுக்கு சென்று உழவார பணிகளை மேற்கொண்டால் நல்லது. பைரவர் வழிபாடும் சிறந்தது அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதம், ரோஹிணி, மிருகசீரிடம்1,2 பாதம்முடிய)
ராசிநாதன் சுக்ரன் ஆட்சியில் வக்ரியாக ஓரளவு நன்மை உண்டாகும், கணவன் மனைவி சந்தோஷம் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். அதே நேரம் 2ல் இருக்கும் சூரியன் கொஞ்சம் தொல்லை கொடுப்பார் கவனம் தேவை, நினைத்த செயல்கள் வெற்றியடைவதில் தடை இருக்கும், உத்தியோகத்தில், மற்ற தொழில் செய்வோர் பொருளாதார ரீதியான சிக்கல்கள் உண்டாகும். கண் வியாதி, பிறரை நம்பி ஏமாறுதல் போன்றவை இருக்கும். சந்திரன் அவ்வப்போது நல்லதை செய்வார். செவ்வாய், 2ல் இருக்கும் புதன் நல்ல வாக்கு பலத்தையும் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், முறியடிக்கும் பேச்சு திறனை தருவார். மனம் லேசாகும்.
பத்தில் செவ்வாய் பிரயாண செலவுகளை தருவார். உஷ்ண சம்பந்தமான நோய் தாக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல பெயர் இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர், பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். குருபகவான் வக்ர கதியில் இருப்பதாலும்,மாத மத்தியில் தனுருக்கு திரும்புவதாலும் பெரிய நன்மை ஏதும் இருக்காது. ஆனால் பார்வையால் சில நன்மைகள் கிடைக்கும். சனிபகவான் நன்மை தரவில்லை ஓரளவு துன்பத்தை தருவார்.
ராகு கேதுக்கள் குடும்ப உறவுகள் தாய் தந்தையர் போன்றோரின் முன்னேற்றத்தை தடை செய்வர். ஒரு சோர்வை தருவர். பொருள் திருட்டு கெட்ட பெயர் செயல்களில் தடை போன்றவை இருக்கும். பொதுவில் இந்த மாதம் சுமாராக இருக்கும் சிக்கனமாகவும், வார்த்தைகளை அளந்து பேசியும் இருந்தால் தொல்லை இல்லை.
சந்திராஷ்டமம்: கார்த்திகை – ஜூலை 4, ரோகிணி – ஜூலை 5, மிருகசீரிடம் – ஜூலை 6
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அம்பாளே துணை என்றபடியால் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள், நெய் விளக்கேற்றி வாருங்கள், முடிந்தவரை தான தர்மங்களை அதிகம் செய்யுங்கள் நன்மை உண்டாகும். அன்னதானங்கள் விடாமல் செய்யுங்கள்
மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4 பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம்முடிய)
ராசிநாதன் ராசியில் வக்ரியாக இது நன்மையை தராது மேலும் கேதுவின் பார்வையும் சூரியன் ராகுவின் சேர்க்கையும். முன்யோசனை இன்றி நடந்து கொள்ள நேரிடும். பொருள் விரயம் ஆகும்.உஷ்ண சம்பந்தமான நோய்களால் அவதி, மேலும் சூரியனும், ராகுவும் உடல் ஆரோக்கியம் கெட காரணம் ஆவார்கள், பிரயாண களைப்பு, வேலை பளு, நண்பர் உறவினர் துன்பத்துக்கு ஆளாகுதல், ஜீவன வகையில் கஷ்டம் ஏற்படும். சந்திரனால் ஓரளவு நன்மை. மாத ஆரம்பத்தில் செவ்வாய் 9ல் அலைச்சல், முயற்சியில் தடை, பின் மாத மத்திக்கு பின் ஓரளவு நன்மை தருகிறார் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் வருமானத்தை தருகிறார். குரு ஆரம்பத்தில் மந்த நிலையை தருவார். மாத மத்தியில் நல்ல சுகத்தை தருவார். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும். மனைவி/கணவன் மூலம் நன்மை உண்டாகும். வேலையில் இருப்போர் சனியினால் வழக்குகளில் சிக்குதல் அல்லது பதவி இறக்கம், வேலை இழப்பு போன்றவை இருக்கும். சொந்த தொழில் செய்வோர் வங்கி பிரச்சனை கணக்கு வழக்குகளில் பிரச்சனை இருக்கும். எதிலும் கவனமாய் இருத்தல் நலம். சுக்ரன் 12ல் எழுத்தாளர்கள், மீடியா போன்றோர் நல்ல பலனை புகழை பெறுவர். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பொதுவில் இந்த மாதம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம், ராசிநாதன் புதன், சுக்ரன், சந்திரன், குரு இவர்கள் மட்டுமே நன்மை செய்கின்றனர். சிக்கணம் தேவை
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் – ஜுலை 6, திருவாதிரை – ஜூலை 7, புனர்பூசம் – ஜூலை 8
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : உங்கள் ராசி தேவதை பெருமாளை சேவித்து கொள்வது நல்லது. பெருமாளுக்கு நெய் விளக்கேறுவது நல்லது. முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள். ப்ரதோஷத்தன்று நந்தி வழிபாடும் நல்லது.
கடக ராசி (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம்முடிய)
ராசிநாதன் சந்திரன் முதல் நாளில் 9ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் அதுமுதல் மிதுன ராசி புனர்பூசம் நக்ஷத்திரம் வரும் வரை பெரிய லாபங்கள் ஏதுமில்லை மன கவலைகள் இருக்கும், செலவுகள் அதிகரிக்கும். அதன்பின் நல்ல நிலை ஏற்படும். சூரியன் 12ல் எதிர்பாராத இனங்களில் பணம் செலவாகும், கடன் வாங்கும் சூழல் உருவாகும். உத்தியோகம், சொந்த தொழில் என்று மந்தமாக இருக்கும். மாத மத்தியில் 9ல் வரும் செவ்வாய் ஓரளவு நன்மை செய்வார். அவரின் 4,8 பார்வைகள் ஓரளவு துன்பத்தை தீர்க்கும். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். பொதுவாக இந்த மாதம் எந்த கிரஹமும் நன்மை செய்யவில்லை, 7ல் இருக்கும் குரு பகவான் தான் மற்றும், 11ல் இருக்கும் சுக்ரன் சில சந்தோஷங்களை தருவார். கணவன் மனைவி நெருக்கம், குடும்பத்தில் குதூகலம், ஆடை ஆபரண சேர்க்கை, கல்வியில் நல்ல முன்னேற்றம், பிள்ளைகளால் பெருமை, ஆலய தரிசனம், ஆன்மீகத்தில் ஈடுபடுதல், சிலருக்கு திருமண ப்ராப்தம், சுப செலவுகள் என்று இருக்கும். சனியால் அவ்வளவு நன்மை இல்லை எனினும் கெடுதல் அதிகம் இல்லை உடல் ரீதியான பாதிப்பை தருவார் ஆனாலும் சரியாகி விடும். 6ல் இருக்கும் கேது வியாதி, வழக்குகளை தீர்த்து வைப்பார். வருவாயை அதிகரிக்க செய்வார். அரசாங்க ஆதரவு உண்டாகும். 12ல் இருக்கும் ராகு சுப செலவுகளை தருவார். நோய் நொடி, வழக்குகள் மறைமுக சத்ரு, கடன் தொல்லை இவை இல்லாமல் செய்வார். பொதுவில் இந்த மாதம் நன்மை தீமை கலந்து இருந்தாலும் நன்மை அதிகம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : புனர்பூசம் – ஜூலை 8, பூசம் – ஜூலை 9, ஆயில்யம் – ஜூலை 10
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : எல்லை தெய்வம், சாஸ்தா, ஐயனார் அல்லது கால பைரவர் போன்ற தெய்வங்களை வணங்கிவருவது நலம், முடிந்தால் ஐயப்பன் அல்லது பைரவருக்கு வஸ்திரம் சாற்றுங்கள், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வதும், முதியோருக்கு உதவி செய்தலும் நன்மை தரும்.
சிம்ம ராசி(மகம், பூரம், உத்திரம் 1ம்பாதம்முடிய)
பொதுவாக சூரியன் ஜனன ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரித்தால் அதிக நன்மைகள் யோக பலன்கள் இருக்கும். இந்தமாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் 11ல் சஞ்சரிக்கிறார். அதனால் உங்களை எதிர்ப்போர் இருந்த இடம் தெரியாமல் போவார். ஜீவன வகையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீங்கள் என்றோ செய்த நல்ல செயல் இந்த மாதம் உங்களுக்கு ஆதாயத்தை தரும். சந்திரனும் தன் பங்குக்கு அதிக நன்மை செய்கிறார். செவ்வாய் மாத முற்பகுதியில் 7ல் இருந்து கொண்டு கணவன் மனைவி உறவில் பிணக்கு, சில சங்கடங்கள் பின் மாத மத்தியில் 8ல் சஞ்சரித்து சில சிரமங்களை தருவார் கவனம் தேவை, புதன் 11ல் இருந்து கொண்டு மகிழ்ச்சியை தருவார். சமூக அந்தஸ்து கிடைக்கும் வாகன லாபம், தனம், துணிச்சல் போன்றவற்றை தருவார். குரு மாத கடைசியில் தான் நல்லதை செய்கிறார். அதுவரை சில வியாதிகள் துயர சம்பவங்கள் என்று தருவார். சனி தன் பங்குக்கு கால் வலி, எலும்பு மஜ்ஜைகளில் வலி மூட்டு வலி போன்றவற்றை தந்து சங்கடப்படுத்துவார் அதேநேரம் 6ல் ஆட்சியாக இருப்பதால் பகை வெல்லும் திறன் ஏற்படு, ருண ரோக சத்ருவை இல்லாமல் செய்துவிடுவார் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சுக்ரன் 10ல் இருப்பது உத்தியோகத்துறையில் இருப்பவர்களுக்கு சில அபவாதங்களை தரும் வீண் வம்பு வழக்கு என்று இருக்கும். ஆனால் கவலை வேண்டாம் சனி காப்பாற்றுவார். 11ல் இருக்கும் ராகு மிகுந்த நன்மையை தருகிறார். சகல துறைகளிலிலும் இருப்போர்க்கு நன்மையே தருகிறார் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், விவசாயம், மாணவர், கலைத்துறை என்று அனைவருக்கும் வளமான நிலை உண்டாகும். பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் : மகம் – ஜூலை 11, பூரம் – ஜூன் 15, ஜூலை 12,13, உத்திரம் – ஜூன் 16, ஜூலை 13,14
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சிவன் வழிபாடு, ஓம் நமசிவாய என்று உச்சரித்தல், ப்ரதோஷ வழிபாடு, காளைக்கு உணவிடுதல், அன்னதானம் நீர்மோர் தானம் போன்றவை நன்மை தரும், முடிந்தால் ருத்ராக்ஷ மாலை ஒன்றை வாங்கி அணிந்து கொள்ளுங்கள், எத்தனை சிவ நாமத்தை சொல்லமுடியுமோ அத்தனை சொல்லுங்கள்
கன்யா ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம்முடிய)
ராசிநாதன் புதன் 10ல் சூரியனுடன் நோய் நொடி இருப்பின் அறவே நீங்கும். மனதில் ஒரு சுறுசுறுப்பு ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.உத்தியோகம் வியாபாரம் சொந்த தொழில் இவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலையும் கிடைக்கலாம். செவ்வாயும் தன்பங்குக்கு மாத முற்பகுதியில் வெற்றியை தருவார். வருவாயில் லாபம் இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் பேரும் புகழும் உண்டாகும். 5ல் இருக்கும் குரு சனியாலும் நன்மைகள் உண்டாகும். குழந்தை எதிர்பார்த்தோருக்கு பாக்கியம் இந்த மாதத்தில் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளால் மனம் வலுவடையும். சுக்ரன் 9ல் கல்வியில் வளர்ச்சி, கலைத்துறையில் இருப்போர்க்கு முன்னேற்றம், தர்ம காரியங்களில் ஈடுபடுதல், செல்வ செழிப்பு உண்டாகும். 4லில் இருக்கும் கேதுவால் சில கெடுதல்கள் உண்டாலும் தாயார் வழியில் துன்பம் இருந்தாலும் மற்ற கிரஹங்களின் அனுகூலம் அதை சிறிய அளவில் செய்யும். பத்தில் இருக்கும் ராகு இருவிதமான வருவாயை தரும். உத்தியோகத்தில் இருப்போர்க்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்வோர் அனைவருக்கும் விற்பனை அதிகரித்து முன்னேற்றம் ஏற்படும் பொதுவில் பல கிரஹங்கள் நன்மை தருவதால் இந்த மாதம் மிக சிறப்பாக இருக்கும். சேமிக்க துவங்குங்கள்.
சந்திராஷ்டமம் : உத்திரம் – ஜூன் 16, ஜூலை 13,14, ஹஸ்தம் – ஜூன் 17,18, ஜூலை – 15, சித்திரை – ஜூன் 18,19
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும்: அருகில் உள்ள வேங்கடாஜலபதி கோவிலுக்கு செல்லுங்கள், தாயாருக்கு நெய் தீபம் ஏற்றுங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம். லக்ஷ்மீ அஷ்டோத்திரம் போன்றவை சொல்லுங்கள் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் நன்மை உண்டாகும்.
துலா ராசி (சித்திரை3,4ம்பாதம், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்முடிய)
ராசிநாதன் நன்மை தரவில்லை 8ல் வக்ரியாகி சிறுசிறு உடல் பிரச்சனைகளை தருகிறார். ஆனால் சூரிய பகவான் 9ல் இருந்து கொண்டு ஓரளவு நன்மை செய்கிறார். அது புதன் வீடு என்பதால் தாய் தந்தயருக்கு ஏற்படும் பிணிகளை போக்குகிறார். உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றத்தை தருகிறார். சந்திரன் சில சமயங்களில் தான் நன்மை செய்கிறார். செவ்வாய் மாத மத்தி வரை 5ல் இருந்து குழந்தைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு அல்லது கல்வி செலவு, மருத்துவ செலவு என்று கொடுக்கிறார் அதேநேரம் மாத பிற்பகுதியில் வியாதியை குணமாக்கி எதிலும் வெற்றி என்ற நிலையை தருகிறார். சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியையும் அதிக நன்மையையும் தருகிறார். 9ல் இருக்கும் புதன் மற்றும் ராகு நன்மையை செய்ய வில்லை மாறாக சில துன்பங்களை வழக்குகளை வீண் பழியை தருகிறார் கவனமாக இருத்தல் வேண்டும். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவேண்டும். குருபகவான் மற்றும் சனி பகவான் பெரிய நன்மைகளை செய்யவில்லை. ஆனாலும் பார்வையால் நன்மை தருகின்றனர். 3ல் இருக்கும் கேதுபகவான் அதிக நன்மை செய்கின்றார் புகழ் பரவும், வேலையில் உயர்ந்த நிலை ஏற்படும். சொந்த தொழிலில் வெற்றி உண்டாகும். தன ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பொதுவாக தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் கவலை வேண்டாம் காரணம் இந்த மாதம் பெரும்பாலான கிரஹ நிலைகள் சுமாராக இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்போர், சொந்த தொழில் செய்வோர் விவசாயி, கலைத்துறை, மாணவர்கள், பெண்கள் என்று அனைவரும் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். பொதுவாக வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் வெகு சுமார் என்பதால் சிக்கணத்தை கடைபிடிப்பது நல்லது. கவலை வேண்டாம் ப்ரார்த்தனைகள் நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : சித்திரை – ஜூன் 18,19, ஸ்வாதி – ஜூன் 20, விசாகம் – ஜூன் 21
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காய் உடையுங்கள், பிள்ளையாரை வணங்கி விநாயகர் அகவல் படியுங்கள், நவக்ரஹங்களை சுற்றி வாருங்கள், அன்னதானம் செய்யுங்கள். ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கேற்றுங்கள்.
விருச்சிக ராசி (விசாகம் 4ம்பாதம், அனுஷம், கேட்டைமுடிய)
ராசிநாதன் செவ்வாய் 18.06.2020ல் 5ம் இடத்துக்கு மீன ராசிக்கு மாறுகிறார். பொதுவாக ராசிக்கு 5ல் செவ்வாய் நன்மை செய்வதில்லை ஆனால் மீனத்தில் செவ்வாய் பலம் பெற்று இருப்பதாலும் விருச்சிகத்துக்கு குருவின் வீடு சுபம் என்பதாலும் நன்மைகள் நிறைய நடக்கும். மேலும் 8ல் இருக்கும் புதன் ஆட்சியாக இருப்பதால் தெய்வானுகூலம் உண்டாகும். குழந்தைகள் ஆடை ஆபரண சேர்க்கை கல்வியில் முன்னேற்றம், பிறருக்கு உபகாரம் செய்யும் மனப்பான்மை உண்டாகும். மாத பிற்பகுதியில் குருபகவான் 2ல் வந்து பொருளாதாரத்தில் ஏற்றத்தை தருகிறார். தொழில் வியாபாரம், உத்தியோகம், கலைத்துறை விவசாயம் என்று அனைத்து துறையினரும் முன்னேற்றம் அடைவர், 7ல் இருக்கும் சுக்ரன் கணவன் மனைவிக்குள் ஒரு நெருக்கத்தையும், பொருள் வரவையும் தருவார் எழுத்து துறையில் இருப்பவர் அதிகாரத்தின் உயர்பதவியில் இருப்பவர், நல்ல முன்னேற்றம் அடைவர். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். 3ல் இருக்கும் சனிபகவான் நோயை விரட்டுவார், விருப்பங்களை பூர்த்தி செய்வார். உத்தியோகத்தில் இருப்போருக்கு நல்ல நிலை ஏற்படும். அரசியல், சொந்த தொழில், கலைஞர்கள், என்று அனைவருக்கும் முன்னேற்றத்தை தருவார். சூரியன் ராகு கேது இவர்கள் சில துன்பங்கள் அபகீர்த்தி பொருள் திருட்டு போகுதல், பெற்றோரின் உடல் பாதிப்பு, முன்னேற்ற தடை, வீடு மனை போன்றவற்றில் பிரச்சனை என்று தருவார்கள் ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. பொதுவில் இந்த மாதம் நன்மை தீமை கலந்து இருக்கிறது. எதிலும் கவனமாக இருத்தல் வீண் விவாதங்களை தவிர்த்தல் போன்றவை நன்மை தரும்.
சந்திராஷ்டமம் : விசாகம் – ஜூன் 21, அனுஷம் – ஜூன் 22, கேட்டை – ஜூன் 23
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்த சஷ்டி கவசம் படியுங்கள், வாயார முருகா என்று சொல்லி கொண்டிருங்கள், முடிந்தால் அருபடைவீடுகளுக்கு சென்று வாருங்கள், செவ்வாய் கிழமைகளில் முருகன் பெயரை சொல்லி தான தர்மம் செய்யுங்கள்
தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம்பாதம்முடிய):
ராசிநாதன் மாத முற்பகுதியில் 2ம் இடத்திலும், 30.06.20 முதல் ராசியிலும் வக்ரியாக இருப்பதால் இட பெயர்ச்சி, பொருளாதார சரிவு உண்டாகுதல், கௌரவ பாதிப்பு போன்றவையும் பேச்சில் சோர்வும், எதையும் ரொம்ப கஷ்டப்பட்டு முடிக்கும் நிலையும் உண்டாகும். சூரியன் 7ல் சஞ்சரிப்பதால் கணவன்/மனைவி ஆரோக்கியம் பாதிப்பு அல்லது சிறு விபத்து போன்றவை ஏற்படும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. செவ்வாயும் உடல் பாதிப்பை தருகிறார். அனைத்து துறையினருக்கும் வேலை பளு, தொழில் வியாபாரம் மந்தம், மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறுதல் போன்றவை இருக்கும். உடல் உபாதைகள் இருக்கும் கவனம் தேவை, புதனும் தன்பங்குக்கு கலகம், மந்த நிலை மறதி போன்றவற்றை தருவார். 6ல் இருக்கும் வக்ர சுக்ரன் உபயோகம் இல்லாமல் இருக்கிறார். 2ல் இருக்கும் சனிபகவான் நண்பர்கள் உறவினர்களால் விரோதம், ஜீவன குறைவு போன்றவற்றை தருகிறார். ஜென்ம ராசியில் இருக்கும் கேது, 7ல் இருக்கும் கேதுவும் பிணியை தரும். பொதுவில் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் மேற்ச்சொன்னவை மிக குறைவாக இருக்கும். இந்த மாதம் நன்மை இல்லை அல்லது மிக குறைவு. அதிக கவனத்துடன் நிதானத்துடன், சிக்கணமாக இருத்தல் நலம் தரும். மேலும் பல கிரஹங்கள் நன்மை செய்யாததால் வார்த்தைகளை கவனமாக விட வேண்டும். இந்த மாதம் பொறுமை அவசியம். இறைவனை முழுவதுமாக நம்புங்கள் இறை நாமத்தை சொல்லி கொண்டிருங்கள் ஓரளவு நன்மை நடக்கும்.
சந்திராஷ்டமம் : மூலம் – ஜூன் 24, பூராடம் – ஜூன் 25, உத்திராடம் – ஜூன் 26
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : தக்ஷிணா மூர்த்தியையும், அனுமனையும் வழிபடுங்கள், சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்துக்கு பால் வாங்கி கொடுங்கள், அனுமனுக்கு வெண்ணை சாற்றுங்கள் வியாழக்கிழமையில். முடிந்தால் தயிர்சாதம் தானமாக கொடுக்கவும்.
மகர ராசி (உத்திராடம் 2,3,4, திருவோணம் , அவிட்டம்1,2 பாதங்கள்முடிய)
ராசிநாதன் வக்ரியாக ராசியில் பெரிய கெடுதல்கள் ஏதுமில்லை, முன்னேற்றம் மெதுவாக இருக்கும். குரு பகவான் மாத பிற்பகுதிவரை இடமாற்றம் வேலையில் முன்னேற்ற தடை, பொருளாதார சரிவு என்று தந்தாலும் பிற்பகுதியில் 12ம் இடம் செல்வதால் சுப செலவுகள் பிரயாணம் போன்றவற்றின் மூலம் ஆதாயம், கல்வி செலவும், வாகனம் மனை போன்றவற்றால் செலவு என்று இருக்கும். 6ல் சூரியன் புதன் ராகு, சூரியனை கண்ட பனி போல நோய்கள் விலகும், துன்பங்கள் நீங்கும் உத்தியோகம், சொந்த தொழில், கல்வி போன்றவற்றில் முன்னேற்றம், ஆதாயம் அதிகம், பொருளாதாரத்தில் அபிவிருத்தி, சகல செயல்களிலும் வெற்றி உண்டாகும், சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும். கடன், வழக்கு, பகை இவற்றின் பாதிப்பு தணிந்துவிடும். வருவாய் அதிகரிக்கும். 3ல் செவ்வாய் வாகன சுகம், பூமிலாபம், மீனத்தில் இருக்கும்போது உத்தியோகம், சொந்த தொழில், அனைத்து பிரிவினருக்கும் மிகுந்த நன்மைகளை செய்து விடும். 5ல் சுக்ரன் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது. சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடை பெறும். வாக்கு வன்மை ஏற்படும். 12ல் இருக்கும் கேதுவால் மருத்துவ செலவு, வழக்கை முடிக்க கோர்ட்டு செலவு, கடனை அடைக்க அசல் வட்டி போன்ற வகையில் பண செலவுகள் ஏற்படும். பொதுவில் இந்த மாதம் மிகுந்த நன்மை தரும், கெடுதல்கள் குறைவாக இருக்கும். சிக்கணத்தை ஏற்படுத்தி சேமிப்பை பெருக்கி கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம் : உத்திராடம் – ஜூன் 26, திருவோணம் – ஜூன் 27, அவிட்டம் – ஜூன் 28
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களூம் : பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள், ராம நாமம் சொல்லுங்கள், முடிந்த அளவு பசுக்களுக்கு, விலங்கினங்களுக்கு உணவிடுங்கள், அன்னதானம், வஸ்திர தானம் போன்று செய்யுங்கள்
கும்ப ராசி (அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்முடிய)
ராசிநாதன் 12ல் வக்ரியாக, மருத்துவ செலவு, வெளியூர் பயண செலவுகள், குருவும் 12ல் இருப்பதால் சுப செலவுகள், தெய்வ வழிபாடு யாத்திரை, குடும்பம் சுபிக்ஷம் பெறுதல் போன்றவை இருக்கும். 5ல் சூரியன் வியாதியை தரும் , பகைவர்களால் துன்பம் ஏற்படும். பெரியோர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். சிறுதவறுகளால் கௌரவ பாதிப்பு ஏற்படும். சந்திரன் அவ்வப்போது நன்மை செய்யும், மகிழ்ச்சியை தரும், செவ்வாய் மீனத்தில் வரும்போது அவ்வளவு நன்மை செய்யாது. குடும்பத்தில் சண்டை அதிகரிக்கும், கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நலம் தரும். புதனும் நன்மை தரவில்லை, வழக்குகள் ஏற்படும், வீண் விரயம், அயலூர் பயணங்களால் துன்பம், குழந்தைகளால் பிரச்சனைகள் எல்லாம் உண்டாகும் சுக்ரன் ஒருவரே மாதம் முழுவதும் நன்மை தருகிறார். பொருளாதாரம் பரவாயில்லை குடும்பம் நன்றாக இருக்கும், நண்பர்கள் உறவினருகளுடன் விருந்துண்ணல், ஆடல் பாடல் கேளிக்கை போன்ற விஷயங்களும் உண்டாகும். ராகு 5ல் நன்மை தரவில்லை எனினும் 11ல் கேது குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை தந்து மகிழ்ச்சியை தருவார், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சொந்த தொழில் செய்வோர், கலைத்துறையினர், விவசாயிகள், அரசியல்வாதிகள், பெண்கள் மாணவர்கள் என்று அனைவருக்கும் ஒரு மேம்பட்ட நிலை கேதுவால் உண்டாகும். பொதுவில் நன்மை ஓரளவு இருக்கிறது இந்த மாதத்தில் முடிந்த வரையில் வருவாயை சேமிக்கும் பழக்கம் கொண்டால் நன்மை உண்டாகும். சுய கட்டுப்பாடு அவசியம். பொறுமை நிதானமும் கடைபிடிக்க வேண்டும்.
சந்திராஷ்டமம் : அவிட்டம் – ஜூன் 27,28 சதயம் – ஜூன் 28, பூரட்டாதி – ஜூன் 29,
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அம்பாளை வணங்க வேண்டும், அருகில் உள்ள லக்ஷ்மி/அம்பாள் கோவிலில் தாயார் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுதல், காலை வேளையில் அம்பாள் பெயரை 28 தடவை உச்சரித்தல் போன்றவையும் முடிந்த அளவு அன்னதானம் செய்வதையும் கொண்டால் இந்தமாதம் கஷ்டங்களை குறைக்கும்.
மீன ராசி (பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி, ரேவதிமுடிய)
ராசிநாதன் குருபகவான் 11ல் லாபத்தில் வக்ரியாக 30.06.20 வரை சஞ்சரிக்கிறார் பின் 10ல் ஆட்சி, தொழில் உத்தியோகம், கலைத்துறை, அரசியல், விவசாயம் என்று அனைத்து பிரிவினருக்கும் ஒரு மாற்றம் ஏற்படும், அடிக்கடி பிரயாணங்கள் இருக்கும், கண் சம்பந்தமான நோய் தாக்கலாம், வாயு பித்தம் இருக்கலாம், அதேநேரம் பொருளாதாரம் நன்றாக இருக்கும். மாத பிற்பகுதியில் இழந்த பதவி, பொருள் நட்டம், கௌரவ இழப்பு என்று கடந்த காலத்தில் இருந்தது நீங்கி பதவி உயர்வு, கௌரவம், செல்வம் எல்லாம் பெறுவார். ஜீவன வகையில் ஆதாயம் உண்டாகும். பூமி, நிலம் போன்றவற்றில் வருமானம், புதிய வீடு வாகனம் அமையும். குழந்தை பேறு எதிர்பார்த்தவர்களுக்கு கற்போற்பத்தி இந்த மாதம் உண்டாகும். சந்திரனால் மாத ஆரம்பம் 2 நாள் மிகுந்த மகிழ்ச்சியும் உடல் ஆரோக்கியமும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். சந்திரன் மாதம் முழுவதும் நன்மை செய்கிறார். புதனால் வாகன யோகம், சுகம் சுப காரியங்கள் நடத்தல், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குதல், சுக்ரனும் ஆடம்பர பொருள் நகை சேர்க்கை, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்,11ல் இருக்கும் சனிபகவான் மிக நல்ல பலனை தருகிறார் பொருளாதாரம் மிக சிறந்த நிலையை அடையும், வியாபாரத்தில் கனிசமான லாபம் உத்தியோகம் பார்ப்பவருக்கு உயர்ந்த நிலை இருக்கும். மற்ற கிரஹங்கள் அவ்வளவு அனுகூலம் இல்லை, சில தீமைகள் உண்டாகும் உடல் ரீதியான படுத்தல் இருக்கும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், மறதி, சோர்வு இவற்றை தரும் ஆனாலும் நன்மைகள் நிறைந்து காணப்படுவதால் கெடுபலன்கள் குறைவாக இருப்பதால் மகிழ்ச்சியான மாதமாக அமையும்.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி – ஜூன் 29, உத்திரட்டாதி – ஜூன் 30, ரேவதி – ஜூலை 1
வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஐயப்பனை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவன் கோவிலில் பிக்ஷாடனரை வழிபடுவதாலும் துன்பம் தீரும், பிச்சைக்காரர்களுக்கு உணவிடுங்கள், ஏழை கன்னி பெண்களுக்கு திருமண உதவி அல்லது கஷ்டப்படுகிறவர்களுக்கு பண உதவி போன்று செய்யுங்கள்.
குறிப்பு:
இதுவரை சொல்லப்பட்ட பலன்கள் எல்லாம் பொதுவானவை. உங்கள் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன்கள் அதிகமாகவும் கெடுபலன்கள் குறைவாகவும் இருக்கும். மேலும் தசாபுக்திகள் சாதகமாய் இருந்தாலும் நல்லதாகவே நடக்கும். உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை சரிபார்த்து கொள்ளுங்கள்.
அன்புடன்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, I Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965
Skype ID: Ravisarangan
!!சர்வே ஜனா சுகினோ பவந்து!!