மீன ராசி

மீனம் ராசி(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):  – 90/100

லாபத்தில் வருகிறார் சனிபகவான் உங்கள் ஆசைகளை நிறைவேற்ற போகிறார்,  உங்கள் ராசியையும், புத்திரம், பூர்வ புண்ய ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மீன ராசிக்காரர்களுக்கு தொழில் உத்தியோகம் இவற்றில் உயர்வையும், திருமண பாக்கியத்தையும் தருகிறார், பொருளாதாரம் செழிப்படையும், தேவைகள் மனதில் இருக்கும் ஆசைகள் பூர்த்தியடையும், உடல் ஆரோக்கியம் மேம்படும், வீடுவாகன யோங்கள் உண்டாகும், புதிய சொத்துக்கள் ஆடை ஆபரண சேர்க்கை, மனம் தெளிவு பெறல், வேலையில் உற்சாகம், குடும்ப ஒற்றுமை என்று நன்றாகவே இருக்கிறது. பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சியும், 3ஆண்டுகளில் வரும் குரு சஞ்சாரமும் மிகுந்த நன்மையை தர போகின்றன வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உடல் நலம்/ஆரோக்கியம் :

இதுவரை அழுத்தம், சோர்வு மற்ற பிணிகளால் பாதிக்கப்பட்டு இருந்தீர்கள் என்றால் அவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது. பொதுவாக அனைத்து வியாதிகளும் குணமாகும் மனதில் தெம்பு வரும், குடும்ப அங்கத்தினர், வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியமும் நல்ல நிலையில் இருக்கும், பெரிய கஷ்டங்கள் இருக்காது, நாள்பட்ட வியாதிகள் குணம் தெரிய ஆரம்பிக்கும், சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும், பெரியவர்களின் வியாதிகளுக்கு சரியான மருத்து கிடைக்கும். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி முழுவதும் பூரண ஆரோக்கியம் இருக்கும்.

குடும்பம் / உறவுகள் :

பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வர், கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருக்கும், மனம் ஒத்து போகும், குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடந்து சொந்தங்கள் ஒன்று சேரும், சமூக அந்தஸ்து கூடும், பெற்றோரும் சரி பிள்ளைகளும் சரி சொல்படி கேட்பர், மனதுக்கு இனிமையாக இருக்கும், புதிய உறவுகள் உண்டாகும். வீட்டில் நடக்கும் திருமணத்தின் மூலம் குழந்தை பிறப்பின் மூலம் புதிய சொந்தங்கள் அரவணைத்து செல்லும்படி மகிழ்ச்சி தரும்படி இருக்கும்.

வேலை/உத்தியோகம் :

இழந்த வேலை திரும்ப கிடைக்கும், வேலையில் இதுவரை இருந்து வந்த தடுமாற்றம் வேலை பளு, அலுவலக அரசியல் முற்றிலும் நீங்கி உங்கள் கை ஓங்கி இருக்கும், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதமான காலம், வேலையில் ஒரு உற்சாகம் இருக்கும் நிதிதுறை நீதி துறை, அரசாங்கத்தின் உயர்பதவியில் இருப்போருக்கு நல்ல காலம், மற்ற வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும், விரும்பிய இடமாற்றம், நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும், சனிப்பெயர்ச்சியின் 3 ஆண்டு காலமும் குறைவில்லாமல் நிம்மதியான நல்ல நிலை இருக்கும்.

தொழிலதிபர்கள் :

புதிய தொழில் தொடங்க ஏற்றகாலம், வாடிக்கையாளர்கள் ஆதரவு பெருக்கும், உங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம், எதிரிகள் போட்டிகள் தொல்லை மறையும், கணக்கு வழக்குகள் சரியாக இருக்கும். அரசாங்க ஆதரவு உண்டு, வங்கி கடன் எளிதில் கிடைக்கும், யூக வணிகம், பங்கு வர்த்தகம், நிதி, பூமி சம்பந்தப்பட்ட துறைகள், சமையல் ஹோட்டல், போன்ற துறையில் தொழில் செய்வோருக்கு மிக உன்னதமான காலம், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்களும் நல்ல நிலையில் இருக்கும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் வருமானம் இரட்டிப்பாகும், கவலை வேண்டாம்.

மாணவர்கள்:

பள்ளி மேல்படிப்பு படிக்குமாணவர்கள் உற்சாகத்துடன் படித்தி அதிக மதிப்பெண்களை பெறுவர், விரும்பிய கல்லூரி விரும்பிய பாடம் கிடைக்கும், அயல்நாட்டு படிப்பு எண்ணம் கைகூடும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் பாராட்டை பெறுவீர்கள், நண்பர்கள் சேர்க்கை நன்மையை தரும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், ஆராய்ச்சி மாணவர்கள், சட்டம், வணிகம், கணிதம் வர்த்தகம் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் நினைத்த துறையில் வேலை கிடைக்கும். இது நல்ல காலம் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கலைஞர்கள்/அரசியல்வாதிகள்/விவசாயிகள்:

கலைஞர்களுக்கு பொற்காலம், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள், பெயர் புகழ் கூடும், ரசிகரகளின் பாராட்டை தக்க வைத்து கொள்வீர்கள், பணப்புழக்கம் தாராளம், சேமிப்பை அதிகப்படுத்தி கொள்ளுங்கள், அரசாங்க விருது கிடைக்கும், கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் புகழை தரும், அரசியல்வாதிகள் நினைத்த பதவியை அடைந்து அதை தக்க வைத்துக் கொள்வார்கள், தொண்டர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள், மேலிடத்தில் செல்வாக்கு கூடும், பணப்புழக்கம் தாராளம், விருந்துகள் கேளிக்கைகள் என்று சென்றுவருவீர்கள், வாக்கை காப்பாற்றுவீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகரிக்கும், கால்நடையால் லாபம் உண்டாகும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகி குடும்ப ஒற்றுமை பெருகும், வழக்குகள் சாதகம் ஆகும், புதிய பூமி, வீடு வாங்குவீர்கள், அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான போக்கு இருக்கும்.

பெண்கள்:

மகிழ்ச்சியான சனிப்பெயர்ச்சியாக இது அமைகிறது மேற்சொன்ன அனைத்து பலன்களுடன், திருமணம் குழந்தை பாக்கியம், வீடுவாகன யோகங்கள், செல்வாக்கு அதிகரித்தல், புனித யாத்திரை செல்லுதல், விருந்து கேளிக்கைகள் என்று சென்றுவருதல், உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படுதல் உற்சாகம் அதிகரித்தல் உழைக்கும் மகளிருக்கும் வேலையில் உற்சாகம் நினைத்த பதவி கிடைத்தல் பணவரவு தாராளம், சொத்து வாங்குதல், குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரித்தல், அக்கம்பக்கத்தாரோடு அனுகூலமான போக்கு என்று மிக நன்றாகவே இருக்கும்.

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

மிக நன்றாக இருப்பதால், நிறைய தானதர்மங்களை செய்யுங்கள். உங்கள் இஷ்டமான தெய்வத்தை வழிபடுங்கள்.அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். முதியோர், ஊனமுற்றோர், வறியோருக்கு சரீரத்தினாலும், பணத்தினாலும் முடிந்த உதவிகளை செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் தான,தர்மங்களை செய்யுங்கள்.

About Author