திருமணத்திற்கு 10 பொருத்தங்கள், தோஷங்கள், ஜாதக பொருத்தங்கள் எல்லாம் பார்த்து பெண் பிள்ளை இருவருக்கும் பிடித்து இருவீட்டாரும் இயைந்து பின் நிச்சயம் செய்து ஆடம்பரமாக அல்லது ஓரளவு நன்றாக திருமணம் செய்கிறார்கள் முகூர்த்தம் குறிக்கிறார்கள்.
இதில் ஒரு விஷயம் இருக்கு பெரும்பாலும் அந்த காலத்தில் பெண் நக்ஷத்திரத்துக்கு மட்டுமே நல்ல முகூர்த்தம் பார்ப்பார்கள் காரணம் வீட்டுக்கு வரும் பெண் ஐஸ்வர்யம் ஆரோக்கியம் சந்ததி இவை கொண்டு வரவேண்டும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதால்
அந்த காலத்தில் பெண் வேலைக்கு போகமாட்டார் வீட்டு பெரியவர்கள் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாமல் சொன்ன வேலை செய்வார் அப்ப அது ஓகேவாக இருந்தது மேலும் பெண்ணை படிக்க வைக்க மாட்டார்கள்
ஆனால் இன்று நிலை வேறு. பெண்கள் படித்து வேலைக்கு போகிறார்கள் அதுமட்டுமல்ல ஆணுக்கு சமமாக இருக்கிறார்கள் இன்னொன்று இந்த காலத்தில் பிள்ளைகளும் பெரியோர் பேச்சை கேட்பதில்லை தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கிறார்.
அதனால் இருவருடைய நக்ஷத்திரத்துக்கும் பொருந்தி வரும் முகூர்த்தங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அடியேன் அனுபவம்.
சரி இப்படி தேர்ந்தெடுத்து விடுகிறோம் அப்பறம் ஏன் விரிசல்
ஒன்று சத்திரம் கிடைப்பது உறவுகள் வருவது இப்படி பல சரியில்லாத காரணங்களை சொல்லி ஏதோ ஒரு முகூர்த்தம் என்று குறிக்கிறார்கள். உதாரணமாக மாசி 20 -04.03.2022 உத்திரட்டாதி நக்ஷத்திரம் அன்று இரண்டு முகூர்த்தம் காலை 06.00-07.00 கும்ப லக்னம் & காலை 09.00-10.30 மேஷ லக்னம் . இந்த இரண்டாவதில் திருமணம் சீமந்தம் இவற்றுக்கு மட்டும் தான் மற்ற சுபங்கள் இல்லை மேலும் இந்த முகூர்த்த நேரத்தில் கிரக நிலைகள் லக்னத்துக்கு 8ல் பாபர் இருக்கு இது எல்லா மண மக்களின் நக்ஷத்திரத்துக்கும் உகந்த ஒன்று என சொல்ல இயலாது. இது பாதிக்கும்.
முகூர்த்த வேளையில் கிரஹ நிலைகளை ஆராய வேண்டும். வலு ஆராய வேண்டும். பஞாங்கத்தில் போட்டிருக்கு என்பதற்காக அதில் வைத்து கொள்வது பெரியோர்கள் சௌகர்யம் மட்டுமே பார்த்து மணமக்களின் வாழ்க்கை பர்பஸை யோசிக்காமல் செய்வதால் பிரிவு பலவகையில் துண்பம் ஏற்படுகிறது.
இருவருக்கும் பொருத்தமான முகூர்த்தங்கள் எப்படி பார்ப்பது. இங்கே ஒரு உதாரண முகூர்த்தம்.
பெண் பிறந்த நக்ஷத்திரம் – அஸ்வினி
இதற்கு உகந்த முகூர்த்த நக்ஷத்திரங்கள் : ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி
பிள்ளை பிறந்த நக்ஷத்திரம் – திருவாதிரை
இதற்கு உகந்த முகூர்த்த நக்ஷத்திரங்கள் : புனர்பூசம், ரேவதி, ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி, அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை
மேற்படி நக்ஷத்திரங்களில் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சேர்த்து ஒத்துவரும் முகூர்த்த நக்ஷத்திரங்கள் : ரேவதி, ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்
இருவருக்கும் பொருத்தமான முகூர்த்த நக்ஷ்த்திரங்களை தேர்ந்தெடுத்த பின்னர் அன்றைய முகூர்த்த வேளையில் லக்னத்துக்கு 2,4,7,8,12ல் பாபர் இருக்க கூடாது மேலும் 1,8,10,5,9 இவற்றில் அல்லது இவற்றுக்கு சுபர் பார்வை சேர்க்கை மட்டும் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் உத்தம முகூர்த்தம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஒருவேளை பாபர்கள் இருந்து அவர்களின் ஷட்பலம் குறைவாக இருந்து சுபர் பார்வை இருந்தால் பண்ணலாம் பரவாயில்லை என்று இருக்கும்.
இது ஒரு பக்கம் இன்னொன்று பொதுவாக பஞ்சாங்கங்கள் சூரியன் 06.00மணிக்கு எற்ற கணக்கில் 09.00-10.30 என்று கொடுக்கின்றன இது திருமணம் நடைபெறும் ஊரின் சூரியோதயம் கொண்டு மாறுபடும் ஊரில் சூரியோதயம் அன்று 06.21 எனில் முகூர்த்தம் 09.21-10.51 ஆகும்
சரி முகூர்த்தம் இப்படி குறித்து கொடுக்கிறார் ஜோதிடர். 09.21-10.51 என்றால் 10.45க்கு தாலி கட்டுகிறார்கள் அதுவரை புடவை மாற்றுவது மேக்கப் என்று அவர்கள் இஷ்டம்போல, அப்பறம் முக்கியமான சடங்கு பாணிக்ரஹணம். அதாவது மண மகன் மணமகளின் கையை பிடித்து அக்னி வலம் வந்து அம்மி மிதித்து அருந்திதி பார்த்து உறுதி மொழி இருவரும் ஏற்க வேண்டும் இவள் என்னை நம்பி வந்தவள் இவளின் தேவையை பூர்த்தி செய்வதுடன் கடைசிவரை இவளை காப்பேன் என அக்னி தேவர் சாட்சியாக உறுதி கூற மணமகள் என் மேல் நம்பிக்கை வைத்து தன் குடும்பத்தை இவர் ஒப்படைக்கிறார் இவரின் முந்தய ஏழு தலைமுறை இவர் இவருக்கு பின் வரும் ஏழுதலைமுறைகளை என் நற்செயலால் சந்தோஷிக்க செய்து என்னை பெற்றோர் பெருமை படும் படி செய்வேன் இவனுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறாள்.
தாலி கட்டுவதும் இந்த பாணிக்கிரஹணமும் குறிப்பிட்ட அந்த 09.21-10.51க்குள் முடிய வேண்டும் அதன் பின் அசுப வேளை ஆனால் பெரும்பாலும் முகூர்த்தம் முடிய 10 நிமிடம் முன் தான் தாலி கட்டுகிறார்கள் இது பெரும் தவறு சம்ப்ரதாயம் சாஸ்திரம் படி திருமணம் செய்தால் அதன்படி நடக்கனும் இல்லை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கனும்.
சாஸ்திரப்படி தாலி கட்டியபின் மனைவியின் கையை பிடிக்க வேண்டும் இருவரும் அக்னி வலம் வந்து உறுதிமொழி ஏற்கும் வரை பிறர் அவர்களுக்கு கைகொடுக்க கூடாது. ஆனால் இன்றைய காலத்தில் இந்த சம்ப்ரதாயங்களை தூக்கி எறிந்து முதல்நாள் ரிஷப்ஷனிலேயே வெட்டிங்க் ஷூட் இப்படிஎல்லாம் கட்டிப்பிடித்து கைகொடுத்து என்னமோ நடக்கிறது தாலி கட்டியவுடன் மணமகன் மணமகள் இருவர் கையையும் பலர் பிடித்து கொள்கின்றனர். ப்ரோகிதர் பண்ணாதீர்கள் என சொன்னாலும் கேட்பதில்லை
பெற்றோர் ஆகட்டும் மற்றோர் ஆகட்டும் திருமணம் என்பது இரண்டு குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கிறது ஒன்று நம் தர்மப்படி போனால் அதில் சொல்லப்பட்டவைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில் மனம் போனபடி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
லக்ஷங்களை கொட்டி திருமணம் செய்துவிட்டு மண முறிவை செய்வதில் என்ன பயன்.
ஆக வெறும் 10 பொருத்தங்கள் மட்டும் வாழ்வை நிர்ணயிப்பதில்லை முகூர்த்த நேரங்கள் திருமணம் முடியும் வரை மணக்கள் எப்படி இருக்க வேண்டும் பெற்றோர் எப்படி இருக்கவேண்டும் என திருமண மந்திரங்கள் சொல்கிறதோ அப்படி சரியான முறையில் திருமணம் செய்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பது உறுதி
விவாஹ (திருமண) மந்திரத்தில் சில:
ஆப்ராத்ருக்னீம் வருணாபதிக்னீம் ப்ருஹஸ்ப்தே:!
இந்திராஸ்புத்ரக்னீம் லக்ஷ்மயம் தாம் அஸ்யை ஸவிதஸ்ஸுவ!!
இதன் விளக்கம் : ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பர் திருமணம் ஆனதும் பெண் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டிற்குள் புகுகிறாள். அவள் புகும் வேளை அவள் பார்வை அந்த வீட்டில் படும்போது அவள் குணம் பழகும் தன்மை இவை அந்த வீட்டில் பொலிவை ஏற்படுத்தவேண்டும் வீட்டில் உள்ளோருடன் பகைமை பாராட்டாதிருக்க வேண்டும். வீட்டில் உள்ளோர் துன்பம் அற்று இருக்க வேண்டும் ஏ வருண, அக்னீ ப்ருகஸ்பதி இந்திரன் உள்ளிட்ட தேவர்களே நீங்களே சாட்சி
பாணிக்கிரஹணம் முடிந்தபின் அக்னி முன் கணவன் மனைவி கையை பிடித்தபடி சொல்லும் மத்திரம்
பூஷாத்வேதோ நயது ஹஸ்தக்ருஹ்யாச் விநொத்வாப்வரஹதாகும் ரதனே! க்ருஹான் கச்சக்ருஹபத்னி
அக்னிதேவதைகள் பெண்ணை கணவன் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு வேண்டப்படுகின்றன. அக்னிதேவதைகள் அருளால் கணவன் வீட்டாருடைய ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும். மனைவி கணவன் வீட்டுக்கு எஜமானி ஆகிறாள். கணவன் வீட்டுக்கு சென்றபின் அங்குள்ள மைத்துனர், நாத்தனார் உற்றார் உறவினருக்கு தாயாக இருந்து காக்கிறாள். தர்மம் அந்த இல்லத்தில் தழைத்தோங்கும்படி செய்கிறார்.
விவாஹ மந்திர விளக்கங்கள் அடுத்த தொடரில்