ரத ஸப்தமி அர்க்கபத்ர ஸ்நானம் 01-02-2020

ஸூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்புவதால் ரத ஸப்தமி என்று பெயர்

இந்நாளில் ஏழு எருக்க இலைகள், அக்ஷதை, அருகம்புல், பசுவின் சாணம், மஞ்சள் பொடி, ஆகியவற்றை தலையில் வைத்து கிழக்கு முகமாக கீழ் கண்ட ஶ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும். இதற்கு அர்க்கபத்ர ஸ்நானம் எனப் பெயர்

सप्त सप्तिप्रिये देवि सप्त लोक प्रदीपिके ।
सप्तजन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम् ।।
एतज्जन्म कृतं पापं कृतं सप्तसु जन्मसु ।
सर्वं शोकंच मोहंच माकरी हन्तु सप्तमी ।।
नौमि सप्तमि देवि त्वां सप्तलोकैक मातरम् ।
सप्तार्कपत्र स्नानेन मम पापं व्यपोहय ।।

ரத ஸப்தமி

ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்தலோக ப்ரதீபிகே ।
ஸப்தஜந்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் ।।
ஏதஜ்ஜந்ம க்ருதம் பாபம் க்ருதம் ஸப்தஸு ஜந்மஸு ।
ஸர்வம் ஶோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்து ஸப்தமீ ।।
நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்தலோகைக மாதரம் ।
ஸப்தார்க்கபத்ர ஸ்நாநேந மம பாபம் வ்யபோஹய ।।

என்று ஸ்னானம் செய்து रथ सप्तमि स्नानाङ्गम् अर्घ्य प्रदानम् करिष्ये ரத ஸப்தமி ஸ்நாநாங்கம் அர்க்ய ப்ரதாநம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து கீழே உள்ள ஶ்லோகத்தால் அர்க்யம் கொடுக்கவும்.

सप्तसप्ति रथस्थान सप्तलोक प्रदीपक ।
सप्तम्या सहितो देव गृहाणार्घ्यं दिवाकर ।।
दिवाकराय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यं ।।

என்று தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு பகவானுக்கு அர்க்யம்விடவும்

நன்றி சுந்தர வாத்யார்

About Author