ரிஷப ராசி (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :
ராசிநாதன் சுக்ரன் மாத ஆரம்பத்தில் 10ல் இருந்தாலும் 04.02.20க்கு பின் சந்தோஷமான நிலையை தருவார், மேலும் அஷ்டமத்தில் இருக்கும் சனிபகவான் மகரராசிக்கு பெயர்வதால் 9க்குடைய பலனையே தருவார். தந்தை வழியில் சில சிரமங்கள் இருந்தாலும், இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் முக்கால்வாசி குறைந்துவிடும், மேலும், 7ல் செவ்வாய் பலமாய் இருந்து வாழ்க்கை துணைவர் மூலம் நல்ல சூழலை உருவாக்கும், மாத பிற்பகுதியில் புதனால் மிகுந்த ஆதாயம், தொழில்/உத்தியோகத்தில் நல்ல நிலை பணப்புழக்கம் தாராளம், செல்வம் சேருதல், குழந்தைகளால் நன்மை, என்று இருக்கும், மேலும் சூரியன் 9ல் இருந்து மன தைரியத்தை கொடுப்பார், குரு பெரிய நன்மை எதுவும் செய்யாமல் இருந்தாலும் 5,9 பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார், மேலும், 2,5க்குடைய புதன், 9லிருந்து 10 இடம் பெயறும்போது தொழிலில் ஒரு மேன்மையை தருகிறார். பொதுவில் இந்த மாதம் ஓரளவு நன்மை தரும் மேலும் பெரிய பாதிப்புகள் இல்லை, குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், மன கசப்புகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், குழந்தைகளுடனான உறவுகள் நன்றாக இருப்பதால் சந்தோஷம் பெருகும். சிலருக்கு புதுவீடு வாங்கும் யோகம் உண்டு நல்ல வாகன வசதிகளும் உண்டாகும்,பண சேமிப்பும் இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜனவரி 22,23,24