சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் கூறியது போல் X செயலியை உபயோகிக்க கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது X நிறுவனம். சிலகாலமாக கட்டணம் செலுத்தி உபயோகிப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க X நிறுவனம் பல முறைகளை கையாண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சோதனை முயற்சியாக புதிதாய் கணக்கு துவங்குபவர்கள் $1 கட்டணம் செலுத்தவேண்டும் என அறிமுகம் செய்துள்ளது. $1 for X(Twitter) பற்றி பார்ப்போம்.
$1 for X(Twitter)
- இந்த கட்டணம் புதிய கணக்குகளுக்கு மட்டுமே என X நிறுவனம் கூறியுள்ளது .
- ஏற்கனவே இருக்கும் கணக்குகளுக்கு எந்த பாதிப்பும் வராது என கூறியுள்ளது.
- இந்த கட்டண முறை BOT கணக்குகளை குறைப்பதற்கு வழியாக கூறினாலும், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கவே என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால் …
X செயலியின் அனைத்து வசதிகளையும் – பதிவிடுவது, லைக் செய்வது, ரீபோஸ்ட் செய்வது உட்பட உபயோகப்படுத்த விரும்பினால் நீங்கள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே முடியும்.
கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றால், நீங்க அந்த செயலியில் வரும் பதிவுகளை காண முடியும். அங்குள்ள கணக்குகளை பின்பற்ற முடியும். ஆனால் பதிவிடவோ பதில் அளிக்கவோ இயலாது.
இப்பொழுது இரு நாடுகளில் மட்டுமே இந்த சோதனை முயற்சி கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே. ஏற்கனவே இருக்கும் கணக்குகளுக்கு கட்டண முறை வருமா என்று கேட்டால் இப்பொழுது உறுதியாக சொல்ல இயலாது. ஆனால் கொண்டுவந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது. போலி கணக்குகள் குறையும்.