பேஸ்புக் இப்பொழுது புதிதாய் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பெயர் Discover App. முதன்முதலாக பெரு நாட்டில் இந்த செயலி உபயோகத்திற்கு வருகிறது. இந்த செயலி எதற்கு , யாருக்கு உதவும், வேறு எந்த நாடுகளில் இது வரும் என்ற விவரங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Discover App – உபயோகம்
சில வருடங்களுக்கு முன்பு பிரீ பேஸிக்ஸ் என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தது பேஸ்புக். அதாவது சில இணையதளங்களை பார்க்க கட்டணம் ( மொபைல் டேட்டா ) இலவசம். ஆனால் இது இந்தியாவில் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி பிறகு தடை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட அதே கான்செப்ட் ஆனால் கொஞ்சம் வேறுபாட்டுடன் இந்த Discover App ஐ கொண்டுவந்துள்ளது.
Discover App – எப்படி உபயோகிப்பது
இப்பொழுது பெரு நாட்டில் நான்கு மொபைல் கம்பெனிகளுடன் பேஸ்புக் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இவர்களிடம் சிம் வாங்கி ஆக்டிவேட் செய்த பிறகு , இத்னாஹ் டிஸ்கவர் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் இணையத்தை பயன்படுத்துவதற்கு தினமும் குறிப்பிட்ட அளவு மொபைல் டேட்டாவை மொபைல் கம்பெனிகள் இலவசமாக அளிக்கும். ஆனால் இதன் மூலம் வீடியோ பார்க்க இயலாது. டெக்ஸ்ட் மட்டுமே பார்க்க இயலும். வீடியோ பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்று காசு கொடுத்து டேட்டா பேக் வாங்க வேண்டும்.
எந்தெந்த நாடு ??
இணையத்தை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த செயலியை வளரும் நாடுகளில் மட்டும் செயல்படுத்த உள்ளார்கள். முதலில் பெருவில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதை தொடர்ந்து தாய்லாந்து, இராக், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்த உள்ளனர். இப்பொழுதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் சொல்லிவிட்டனர்.