சாம்சங் நிறுவனம் சாதாரண மொபைல்களில் இருந்து ஸ்மார்ட் போன்களுக்கு மாற விரும்புவர்களுக்காக புதிய மாடல் போனை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy M01 Core என்ற இந்த புதிய மாடல் இந்திய மதிப்பில் 5,499 ரூபாய்க்கு கிடைக்கும். இது அதிகபட்ச வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கானதல்ல. எனவே அதிகபட்ச வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த போன் ஏமாற்றம் அளிக்கலாம்.
Android GO இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்பேஸுடன் வந்துள்ளது. 5.3″ HD டிஸ்ப்ளேவுடன் சிகப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த Galaxy M01 Core 3000 mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது. Android GO இயங்குதளமானது பல பெரிய செயலிகளின் லைட் வெர்சனை கொண்டுள்ளது. எனவே அதிக இடம் பிடிக்காமல் உபயோகிப்பாளருக்கு வசதியாக இருக்கும். முன்பக்க கேமேரா 5 MP மற்றும் பின்பக்க கேமிரா 8 MP .
இதில் மற்றுமொரு வசதி இயங்குதளத்திலேயே இருக்கும் Dark Mode. இதில் இருக்கும் Intelligent Photos உங்கள் போனில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் போட்டோக்களில் ஒரே மாதிரி இருக்கும் போட்டோக்களை உங்களுக்கு அடையாளம் காட்டி தேவையில்லாத போட்டோக்களை நீக்க சொல்லும். அதே போல் ‘Smart Paste’ வசதி நீங்கள் இணையதளங்களில் படிவங்களை நிரப்பும் பொழுதும் அந்தந்த இடங்களில் போன் , ஈமெயில் போன்றவற்றை சரியாக பூர்த்தி செய்ய உதவும்.
இப்பொழுது ஆன்லைன் க்ளாசிற்காக மகள் / மற்றும் மகனுக்காக ஸ்மார்ட் போன் வாங்க விரும்புவோருக்கு இது சரியாக இருக்கும்.
இதன் வசதிகள் ( நன்றி samsung.com )
Display | 5.3” HD+ TFT | |
Dimension (mm) / (g) | 8.6mm | |
AP | MediaTek MT6739 | |
Camera | Front 5 MP | |
Rear | 8MP | |
Memory RAM + ROM (GB) | 1+16 GB / 2+32GB | |
Battery (mAh) | 3000mAh | |
Colours | Black, Blue, Red |