Signal App : more privacy and security

Signal App

இன்றைய தேதிக்கு ஸ்மார்ட் போன்களுக்கான மெசஞ்சர் செயலிகள் நெறைய உள்ளன. நமக்கு தெரிந்தே வாட்ஸ் அப் , ஹைக், டெலிகிராம் , பேஸ்புக் மெசஞ்சர் என பல உள்ளன. இதில் இந்தியாவில் டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் அதிகமான நபர்களால் விரும்பி உபயோகிக்கப்படுவதாகும். வாட்ஸ் அப் இப்பொழுது பேஸ்புக் நிறுவனத்தினால் நடத்தப்படுகிறது. இந்த மெசஞ்சர் வரிசையில் புதியதாய் வந்துள்ளது Signal App ( அநேகமாய் இந்தியாவில் உபயோகிப்போர் எண்ணிக்கை குறைவு என எண்ணுகிறேன் ). அதிக அளவில் தெரியப்படாத செயலி இது. ஆனால் வாட்ஸ் அப் செயலியை விட இதில் பல நல்ல விஷயங்கள் குறிப்பாய் பிரைவசி விரும்பிகளுக்காக பல விஷயங்கள் உள்ளன. இதில் முக்கிய விஷயம் , பேஸ்புக் வாட்ஸ் அப்பை யாரிடம் இருந்து வாங்கியதோ அவர்கள்தான் இதை ப்ரமோட் செய்பவர்கள்.

More Security and Privacy

வாட்ஸ் அப் செயலி மிக கடுமையான என்க்ரிப்ட் மூலம் மெசேஜ்களை பாதுகாக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அனைவருக்கும் இருக்கும் பயம் அதை வழிநடத்தும் பேஸ்புக் நிறுவனம்தான். ஏனென்றால் பேஸ்புக்கில் பிரைவசி மீறல் என்பது அடிக்கடி நடக்கும் ஒன்று. அதே போல் நமது எண்கள் நாம் வாட்ஸ் அப் செயலியில் பகிரும் மற்ற விவரங்கள் இவற்றை அந்நிறுவனம் எப்படி பாதுகாக்கிறது என்பதும் ஒரு சந்தேகத்துக்குரிய விஷயம்.

Settings

இப்பொழுது சிக்னல் செயலிக்கு(Signal App) வருவோம். இதில் என்ன செட்டிங்ஸ் உள்ளது என பார்ப்போம். வாட்ஸ் ஆப்பிள் இல்லாத ஒரு வசதி உங்களுக்கு வரும் எஸ் எம் எஸ்களை இந்த ஆப் மூலம் பார்க்கலாம். இது ஒரு கூடுதல் வசதி என்றாலும் பிரைவசி என வரும்பொழுது இதை தவிர்ப்பது நல்லது.

அடுத்து பிரைவசி. இதில் இருக்கும் மிக முக்கிய வசதிகள் ரெண்டு. ஒன்று ஸ்க்ரீன் ஷாட் லாக். ஸ்க்ரீன்ஷாட் லாக் ஆப்ஷன் நீங்க தேர்வு செய்தால், சிக்னல் ஆப் ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க இயலாது. இதனால் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாய் இருக்கும். இதை தேர்வு செய்ய செட்டிங்ஸ் மெனுவில் “screen security” ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தது “Incognito Keyboard” . இதை நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் டைப் செய்வது அல்லது தனிப்பட்ட முறையில் கீ போர்டை கஸ்டமைஸ் செய்வது போன்ற விஷயங்கள் சர்வரில் சேமிக்கப்படாது. எனவே இதை பற்றிய தகவல்கள் சிக்னல் நிறுவனத்திற்கு செல்லாது .

Signal App
Screen Security

Disappearing Messages

இந்த வசதியும் வாட்ஸ் அப்பில் இல்லாத ஒன்று. இப்பொழுதுதான் டெஸ்டிங் செய்து கொண்டுள்ளனர். நீங்கள் அனுப்பும் மெசேஜ் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என முடிவெடுக்கலாம். 30 வினாடிகளில் இருந்து ஐந்து நிமிடங்களுக்குள் மெஸேஜ் டெலிட் ஆவது போல் செட் செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கீர்களோ அந்த சாட் விண்டோவின் மேல் வலது மூலையில் க்ளிக் செய்தால் “Disappearing Messages” வசதியை காட்டும். அதில் இருந்து எவ்வளவு நேரம் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Signal App

வாட்ஸ் அப்பிற்கு சமீபத்திய வரவான டார்க் மோட் வசதியும் இதில்(Signal App) உள்ளது. செட்டிங் உள்ளே சென்று “appearance ” ஆப்ஷனின் உள்ளே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இது ஏற்கனவே சொன்னவாறு இன்னும் பரவலாக இந்தியாவில் உபயோகத்திற்கு வரவில்லை. கண்டிப்பாக உபயோகிக்கலாம். இந்த ஆப் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=org.thoughtcrime.securesms&hl=en_IN

About Author