blogspot.in – Google lose ownership

blogger கூகிள் அளித்த பிளாக் சேவை இந்தியாவிலும் உலக அளவிலும் மிகவும் புகழ்பெற்றது. ஆரம்பத்தில் அனைத்து வலைத்தளங்களுக்கும் blogspot.com என்ற டொமைன் மூலமாக ரிஜிஸ்டர் செய்தாலும் , இப்பொழுது இந்தியாவில் இருந்து புதிதாய் துவங்குபவர்களுக்கு blogspot.in என்ற டொமைன் மூலமாக சேவை அளித்தனர் கூகிள் நிறுவனத்தினர். இப்பொழுது அதில் ஒரு சிக்கல் வந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

சென்ற மாதம் blogspot.in என்ற டொமைனை புதுப்பிக்க வேண்டிய தருணத்தில் கூகிள் நிறுவனம் கோட்டை விட்டுள்ளது. இது கொரோனாவினால் பணியாளர்கள் குறைந்த அளவில் வேலை செய்வதன் காரணமாய் நடந்ததா எனத் தெரியவில்லை. இவர்கள் கோட்டைவிட்டதை வேறு ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது blogspot.in உள்ள பிளாக் செல்ல முயன்றால் கீழே உள்ளவாறு மெசேஜ் வரும்.

blogspot.in

இதையே மாற்றி https://lksthoughts.blogspot.com/ என்று டைப் செய்தால் சரியான பிளாக்கர் தளத்திற்கு செல்லும். இன்னும் பிளாக்கர் உபயோகிப்பவர்கள் பார்த்து சரி செய்து கொள்ளவும். இப்பொழுதைக்கு blogspot.in என்ற டொமைன் வாங்க விரும்பினால் லட்சத்தில் காசை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இன்னமும் யாரும் அதிகம் கேட்டாலும் கேட்கலாம். யார் அதிகம் கேக்கிறார்களோ அவர்களுக்கு விற்றுவிடுவார்கள். இதை பற்றி கூகிள் இன்னும் அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. இதை பற்றி இன்று வந்துள்ள செய்தி. இப்பொழுது இந்த டொமைனை யார் வைத்துள்ளாரோ அவர் கண்டிப்பாய் பல லட்ச ரூபாய் லாபம் பார்ப்பார். அது மட்டும் உறுதி. டொமைன் ஓனர்ஷிப் மாறியுள்ளத்திற்கான ஸ்க்ரீன்ஷாட்.

இப்பொழுது உபயோகிப்பவர்கள் ஏதும் செய்ய இயலாது. அதே போல் ஒரு வேலை கூகிள் நிறுவனத்தால் அந்த டொமைனை அவர்களிடம் இருந்து வாங்கமுடியாமல் போனால் என்ன நடக்கும் என தெரியவில்லை. ஆனால் டேட்டா ஒன்றும் ஆகாது. எனவே அதை எண்ணி பயப்பட வேண்டாம்.

About Author