இப்பொழுது அனைவரும் டார்க் மோட் விரும்புகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அணைத்து செயலிகளும் டார்க் மோட் கொண்டுவருகின்றனர். அந்த வரிசையில் இப்பொழுது கூகிள் சர்ச்சும் டார்க் மோடில் வர உள்ளது. இப்பொழுதைக்கு வெகு சில பீட்டா டெஸ்டிங் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த வசதி வந்துள்ளது. அனைவருக்கும் இன்னும் வரவில்லை.உங்கள் கணிணியின் விண்டோஸ் தீம் “டார்க் தீமாக ” இருக்கும் பட்சத்தில் இதை உபயோகிக்கலாம்.
இதை உபயோகிக்க கண்டிப்பா கூகிள் க்ரோமின் பதிப்பு 76 க்கு மேல இருக்க வேண்டும். அதேபோல் விண்டோஸ் பதிப்பு 1809 அல்லது அதற்கு மேற்பட்டதாய் இருத்தல் அவசியம்.
சென்ற வருடத்தில் இருந்து இந்த வசதியை கூகிள் சோதனை செய்து வந்தாலும் இன்னும் அனைவருக்கும் தரவில்லை. கூடிய விரைவில் அனைவருக்கும் இந்த வசதி வரும் என்று நம்பலாம்.