நாம் ஏற்கனவே மொபைல் க்ளீன் செய்ய நார்ட்டன் செயலியை பார்த்தோம். அந்த வரிசையில் மீண்டும் ஒரு செயலி Files by Google. மிக எளிதான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எந்த விட சிரமமும் இன்றி உபயோகிக்கக் கூடியதாக உள்ளது. கேட்டகிரி வகையாக கோப்புகளை பிரித்து பயனர்களுக்கு காட்டுவதால் தேவையற்ற கோப்புகளை நீக்குவது எளிதாகிறது.
அனைத்திற்கும் மேலே ஜங்க் பைல்கள் , பின் போட்டோக்கள், வீடியோ அதன் பின் செயல்களின் மூலம் சேர்ந்த (எ.கா வாட்ஸ் அப்) கோப்புகள் என்று காட்டுவதால் க்ளீன் செய்ய வசதியாக உள்ளது. அதே போல் இந்த செயலியில் இருந்தே உங்கள் போட்டோக்களை கூகிள் போட்டோஸ் ( google Photos) சேவைக்கு பேக் அப் எடுத்துக் கொள்ளலாம்.தனியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்