ஜி மெயில் நம் வாழ்வின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. அதுவும் ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தால் கண்டிப்பாக ஜி மெயில் ஐடி தேவை. 2018 பிப்ரவரியில் Gmail Go அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் இது அனைத்து மொபைல்களுக்கும் தரப்படவில்லை. அறிமுக நிலை ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கும் , குறைந்த வசதிகள் ( RAM / Processor ) மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து “Android Go ” இயங்குதளத்தை உபயோகப்படுத்தும் மொபைல்களில் இதை உபயோகிக்கமுடிந்தது. இப்பொழுது வரை Gmail Go மற்ற மொபைல்களில் உபயோகிக்கமுடியாது. ஆனால் இனி அனைத்து மொபைல்களிலும் உபயோகிக்கமுடியும் என்று கூறியுள்ளனர். இந்த நிமிடம் வரை இந்த வசதி இன்னும் வரவில்லை.
Gmail Go செயலியின் சில சிறப்புகள்.
சாதாரணமாய் ஜிமெயில் செயலி கிட்டத்தட்ட 100 எம்பி வரை என் மொபைலில் எடுத்துக்கொள்கிறது. மேலே உள்ள படத்தில் அதை பார்க்கலாம். இந்த லைட் செயலியை உபயோகிப்பதன் மூலம் இதை கிட்டத்தட்ட பாதியாக குறைக்கலாம். இதன் மூலம் பயனாளர்களுக்கு மேலும் இடம் கிடைக்கும். அதே போல் ஜிமெயில் கோ செயலி துவக்க நிலை மொபைல்களில் வேகமாய் இயங்கும்.