Google pay – Clarifications

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவ துவங்கியது. அது என்னவென்றால் Google pay என்பது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அதன் மூலம் செய்யப்படும் பண பரிமாற்றத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது என்று வைரலாக வாட்ஸப் மற்றும் ட்விட்டரில் செய்தி பரவத் துவங்கியது. ஆனால் அதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லை. ரிசர்வ் வாங்கி அங்கீகரிக்காமல் எந்த நிறுவனமும் இத்தகைய சர்வீஸை தர இயலாது என்பது அடிப்படை. இந்த வதந்தி கிளம்ப என்ன காரணம் ?

Google pay
Fake News about Google pay
Google pay Case in New Delhi

ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலைக் கொண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் அபிஜித் என்பவர் ஒரு வழக்கு தொடுக்கிறார். அதாவது கூகிள் பே ரிசர்வ் வங்கியில் இருந்து முறையாக அனுமதி வாங்காமல் செயல்படுவதாக. இதற்கு பதிலளித்த ஆர்பிஐ ” கூகிள் பே” ” Payment system” கிடையாது. அது Third party App provider எனவே Payment system அனுமதி தேவையில்லை என்று சொன்னது. ஆனால் நம் மக்கள் அதற்கு முன்பு உள்ள விஷயத்தை தெளிவாக மறைத்துவிட்டு ஒரு புரளியை கிளப்பி விட்டுவிட்டனர். இதனால் பலரும் பயந்து கூகிள் பே செயலியை ரிமூவ் பண்ணுமளவிற்கு சென்றுவிட்டனர்.

ஆனால் இதன் பிறகு கூகிள் பே விளக்கமளித்தனர். அதை யாருமே பகிரவில்லை. அதே போல் National Payments Corporation of India (NPCI) 24ஆம் தேதி அளித்த விளக்கத்தையும் வசதியாக மறந்துவிட்டனர். அந்த விளக்கம் கீழே தந்துள்ளேன்

National Payments Corporation of India (NPCI) today issued an official statement, “We have come across some quotes on social media which suggest that transferring money through Google Pay is not protected by the law, since the app is unauthorised. Reserve Bank of India (RBI) has authorised NPCI as a Payment System Operator (PSO) of UPI and NPCI in its capacity as PSO authorises all UPI participants. We would like to clarify that Google Pay is classified as Third Party App Provider (TPAP) that also provides UPI payment services like many others, working through banking partners and operating under the UPI framework of  NPCI. All authorised TPAPs are listed on the NPCI Website.

All transactions made using any of the authorized TPAPs are fully protected by the redressal processes laid out by applicable guidelines of NPCI/RBI and customers already have full access to the same. Further, we would also like to clarify that all authorised TPAP’s are already bound by full compliance to all the regulations and applicable laws in India.

Status as of now

நடந்து கொண்டிருக்கும் வழக்கு Third Party App Provider vs Payment System Provider என்ற ரீதியில் செல்கின்றது. இதில் மேலும் ஆழமாக விசாரணை நடத்தவேண்டும் என வழக்கு ஜூலை 22க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செய்தியை வெளியிட்ட பெரும்பாலான செய்தி நிறுவனங்களும் தவறாக வழி நடத்தும் வகையிலான தலைப்பையும் , செய்தியின் துவக்கத்திலும் தவறான தகவலை கொடுத்து பயனர்களை குழப்பினார்கள் . இப்பொழுதைக்கு கூகிள் பே உபயோகப்படுத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை. தாராளாமாக உபயோகப்படுத்துங்கள். அதில் பிரச்சனை என்றால் உங்கள் வங்கியையோ அல்லது கூகிள் பே நிறுவன உதவியையோ நாடினால் உதவி கிடைக்கும்.

About Author