சமீப வாரங்களில் தொழில் நுட்ப வட்டாரங்களில் அதிகம் அடிப்படும் விஷயம் இதுதான். முதலில் ஒரு விஷயம் இது கூகிள் Vs இந்திய நிறுவனங்களுக்கான பிரச்சனை அல்ல. கூகிள் + ஆப்பிள் vs செயலி நிறுவனங்களுக்கான பிரச்சனை. ஆப்பிளை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு Google Vs App Companies என்று பிரச்சனை போவதின் காரணம் அதிகப்படியான ஆன்ட்ராய்ட் செயலி நிறுவனங்கள். பிரச்சனை என்னவென்று பார்ப்போம்.
செயலிகளில் இருவகை . ஒன்று எந்தவித விற்பனையும் இல்லாத சாதாரண செயலிகள். உதாரணத்திற்கு எங்களின் tamiltech செயலி போன்றது. அடுத்தது பலவித பரிவர்த்தனைகள் நடக்கும் செயலிகள். உதாரணத்திற்கு கேம் செயலிகள். 90% கேம்களில் In-app purchase என்ற ஒன்று உண்டு. அதாவது கேம் விளையாட சில அதிகப்படி வசதிகளை வாங்குவது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இவை இல்லாமல் சந்தா பரிவர்த்தனைகள் போன்றவையும் உண்டு. இதற்கு இதுவரை ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு வகையாக வைத்திருந்தன. ஆனால் சமீபத்தில் கூகிள் பரிவர்த்தனைகள் அனைத்தும் கூகிளின் in-app purchase முறையில் நடக்கவேண்டுமென்றும் அதில் 30% அவர்களுக்கு கமிஷன் தரவேண்டுமென்றும் கூறியது. ஆப்பிளும் கிட்டத்தட்ட இதே போன்று நிபந்தனை விதித்தது.
ப்ளே ஸ்டோர் என்ற ஒன்றை மட்டும் கொடுத்துவிட்டு அதிகப்படியான கமிஷன் அடிக்கப்பார்க்கிறது கூகிள். ஏற்கனவே கூகிளின் மேலே பல வழக்குகள் நடக்கின்றன. இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்கள் முந்தி கொள்ள குறிப்பாய் பே டி எம் , மினி ஆப் ஸ்டோரை கொண்டுவந்துள்ளதால் விஷயம் Google Vs App Companies சூடு பிடித்துள்ளது.
கூகிள் என்ற பேரசுரனை கட்டுப்படுத்த முயலும் நடவடிக்கைகள் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.