ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகள் அதற்கென்று விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் பொழுது கூகிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். எந்த மாதிரி நடவடிக்கை என்பது என்ன பிரச்சனை என்பதை பொறுத்து இருக்கும். சில சமயம் எச்சரிக்கை மெயில் செல்லும் சரி செய்ய சொல்லி.சில சமயம் தற்காலிகமாய் நீக்கும். அவர்கள் சொல்லும் குறை சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் அனுமதிக்கப்படும். ஆனால் மால்வேர் / ஸ்பேம்வேர் போன்றவை உடனடியாக நீக்கப்படும். அவை அதே பெயரில் மீண்டும் அனுமதிக்கப்படாது. இப்பொழுது 3 Kids game apps ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Princess Salon, Number Coloring and Cats & Cosplay என்ற இந்த மூன்று செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன. இவை மூன்று செயலிகளும் சேர்ந்து 20 மில்லியன் டவுன்லோட் செய்யப்பட்டவை. இவற்றை நீக்கியதற்கு காரணம் International Digital Accountability Council (IDAC) இந்த மூன்று செயலிகளும் கூகிளின் டேட்டா கலெக்சன் பாலிசியை மீறியதை கண்டுபிடித்ததே ஆகும். பயனாளர்களின் Android ID and AAID (Android Advertising ID) numbers திருடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த மூன்று Kids game apps ரிமூவ் செய்யப்பட்டது.