Mitron and Remove China apps removed

கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டுமே இப்பொழுது கூகிள் ப்ளே ஸ்டோரில் இல்லை. இந்த இரண்டுமே நீக்கப்பட்டுவிட்டன. இது பயனாளர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mitron app

Mitron செயலி சீன செயலியான டிக்-டாக் செயலிக்கு மாற்று என்று விளம்பரப்படுத்தப்பட்டது. எனவே 5 மில்லியன் பயனாளர்கள் அதை தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தனர். இந்நிலையில் அந்த செயலியை பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

ஐ ஐ டி ரூர்க்கி மாணவரான சிபன்க் அகர்வால் தான் Mitron செயலியின் நிறுவனர். ஆனால் இதை அவர் உருவாக்கவில்லை. Qboxus என்ற பாகிஸ்தான் நிறுவனத்தின் டிக் டிக் எனப்படும் செயலிக்கான source code ஐ வாங்கி உபயோகப்படுத்தியுள்ளார். அவ்வாறு அவர் வாங்கியது பிரச்சனை இல்லை. வாங்கிய கோடில் எந்த மாறுதலும் செய்யாமல் , பிரைவசி பாலிசி கூட மாற்றாமல் அப்படியே பெயரை மாற்றி கூகிள் ப்ளே ஸ்டோரில் அப் லோட் செய்திருக்கிறார். அதே சமயத்தில் அந்த கோடில் பல பாதுகாப்பு பிரச்சனைகளும் இருந்துள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் சொல்கின்றன. இந்த காரணங்களால் இந்த செயலி இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் Remove China apps செயலியில் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் எதற்காக கூகிள் ப்ளே ஸ்டோரில் அது தடை செய்யப் பட்டுள்ளது என்பதற்கான எந்த விளக்கமும் இது வரை அளிக்கப்படவில்லை.

புதிதாய் எந்த ஒரு செயலியை நிறுவுவதாக இருந்தாலும், அதை பற்றி இணையத்தில் இருக்கும் செய்திகளை படித்துவிட்டு நிறுவுவது நல்லது. நிறுவிய பின், என் தகவல்கள் திருடு போய்விட்டன என அழுவதில் எந்த உபயோகமும் இல்லை. நம்பகமான செயலிகளை மட்டுமே உபயோகப்படுத்தவும் நண்பர்களே !!

About Author