MIUI 12 update for POCO M2

Xiamoi நிறுவனத்தின் பல மாடல்கள் MIUI 12 அப்டேட் ஆகிவிட்டாலும் இன்னும் சில மாடல்களுக்கு 12 அப்டேட் வரவில்லை. குறிப்பாய் அந்த நிறுவனத்தின் தனி ப்ராண்ட் ஆனா Pocoவின் பல மாடல்களுக்கு இப்பொழுதுதான் MIUI 12 அப்டேட் ஒவ்வொரு மாடலாக வந்து கொண்டிருக்கிறது. MIUI 12 என்பது Xiamoi நிறுவனத்தின் பிரத்யேகமான ஓ எஸ். இது ஆன்ட்ராய்ட் 10 பதிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தானாகவே அப்டேட் நோட்டிபிகேஷன் வரும். அப்படி வரவில்லையெனில், settings -> About Phone -> சென்று Check For Updates க்ளிக் செய்யவும். இது 500 எம்பிக்கும் மேற்பட்ட பைல். எனவே டேட்டா பேலன்ஸ் மற்றும் மொபைல் சார்ஜ் வைத்துக்கொண்டு செய்யவும்.

ஏற்கனவே MIUI 12 இருக்கும் மொபைல்களுக்கு டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட் பேட்ச் வந்துள்ளது. மேலே கூறிய அதே வழிமுறையை கொண்டு அப்டேட் செய்துகொள்ளலாம். செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் செய்வது மிக அவசியமான ஒன்றாகும். எனவே தவறவிட வேண்டாம்.

About Author