சீனாவின் Motorola Mobility மொபைல் நிறுவனம், தனது மொபைல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களது மொபைல்களை இந்தியாவில் தயாரிக்க இந்தியாவின் லாவா மொபைல் மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்தியாவில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் மொபைல்களை இந்தியாவில் தயாரிக்க Motorola Mobility நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் ஜனவரியில் இருந்து மார்ச்சுக்குள் இந்தியாவில் தயாரிப்பு துவங்கும் என தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கும் பெரும்பான்மையான மொபைல்களை ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மொபைல் தயாரிக்கும் முதல் சீன நிறுவனம் இதுவாக இருக்க கூடும். ஏற்கனவே xiamoi நிறுவனம் இந்தியாவில் மொபைல்களை உருவாக்கினாலும் எந்த இந்திய நிறுவனத்துடனும் கூட்டு சேரவில்லை.
இது மத்திய அரசின் “Make in India” திட்டம் மற்றும் production linked incentive (PLI) திட்டத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கக்கூடும்.