Play store UI Changes coming soon

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பதற்கேற்ப கூகிள் நிறுவனம் சமீபமாய் தனது செயலிகளில் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. குறிப்பாய் ஜிமெயில் லோகோ, கூகிள் மேப் போன்றவற்றில் அதிகம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த வரிசையில் அடுத்த மாற்றம் கூகிள் ப்ளே ஸ்டோர் UI மாறுகிறது.

இடது பக்கம் இருக்கும் “Hamburgur Menu” இந்த புதிய மாற்றத்தில் இல்லை. அதை ரிமூவ் செய்துவிட்டனர். பிறகு , செட்டிங்ஸ் மெனுவில் அதிகமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது இப்பொழுது ஒரே ஸ்க்ரீனில் வரும் ஆப்ஷன்கள் இனி சப் மெனுவாக மாற்றப்பட்டு அதனுள் வரும்.அதே போல் முன்பு “parental Controls ” என்று இருந்த ஆப்ஷன்கள் இனி “family” என்ற மெனுவிற்குள் வரும் என தெரிகிறது. புதிய சப் மெனு எப்படி இருக்கலாம் என்பதற்கான படங்கள் கீழே உள்ளன.

இவையெல்லாம் இன்னும் சோதனையில்தான் உள்ளது. அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும் அப்டேட் வரவில்லை.எனவே இவை பயன்பாட்டிற்கு வர இன்னும் சிறிது காலம் ஆகலாம். Android Police தளத்தில் வந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

About Author