பெரியாண்டவர்

பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி

This entry is part 1 of 3 in the series குலதெய்வங்கள்

எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . செல்லும் வழி : நாமக்கல் அல்லது சேலத்தில் இருந்து புதுசத்திரம் சென்று விட்டு அங்கிருந்து டாக்சி கிடைக்கும் அல்லது கொஞ்சம் பொறுமையாய் இருந்தால் அரசு பஸ் வரும். அதில் ஏறினால் அதிகபட்சம் இருபது நிமிடங்களில் கண்ணூர்பட்டியை அடையலாம். […]

அழகர் கோவில்

அழகர் கோவில் : An ecstatic visit

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

போன வாரம் எம் குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைச் சேவிக்க அழகர் கோவில் சென்றிருந்தேன், (மதுரை. திவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை)  வழக்கம் போல, அனுபவங்கள் பல, ஆச்சரியங்கள் பல  1) போன முறை போல இந்த முறையும் பெருமாளின் விஸ்வரூப தரிசனம் சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். தனுர் மாதமானதால் காலை 4 மணிக்கே விஸ்வரூப சேவை. வழக்கமாய் விஸ்வரூப தரிசனத்திற்கு வரும் யானை, முதுமலைக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளதால், பசு மாடு சகிதம் மட்டுமே தரிசனம்  2) போன முறை போலவே இந்தமுறையும் […]

சாஸ்தா அபிராமேஸ்வரர்

எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

குலதெய்வங்கள் எல்லாம் ஏன் கிராமத்திலேயே இருக்கிறார்கள்?? என்று யோசித்ததுண்டு! ஏனென்றால் ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் அங்கே வசித்திருக்கிறார்கள். அவர்களின் கனவில் வந்து தன் இருப்பிடத்தைச் சொல்லியோ, அல்லது சுயம்புவாகவோ அங்கே வீற்றிருக்கலாம் என்பது என் எண்ணம். யாரை மறந்தாலும் மறக்கலாம்! குலதெய்வத்தை மட்டும் மறக்கக்கூடாது. காலத்தின் ஓட்டத்தில் தலைமுறைகள் அங்கே இருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை கண்டு ஆராதித்து வருவது எப்போதும் நன்மை தரும். எந்த ஒரு விஷயம் […]