
சிவ தாண்டவம்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை இயல்,இசை,நாடகம். இயற்றமிழ்:- எழுதுவதும் பேசுவதுமாகிய தமிழ் இது. இசைத்தமிழ்:- பண்ணிசைத்துப்பாடுவதே இசைத்தமிழ் நாடகத்தமிழ்:-நாட்டியம் அல்லது நாடகமாக விரிந்திருப்பதே நாடகத்தமிழ். நாடகத்தின் ஒரு பரிமாணம் கூத்து எனக்கொள்ளலாம்.கூத்தின் இன்னுமொரு பரிமாணம் நடனம் அல்லது நாட்டியம்,நர்த்தனம்.எல்லாமே நாடகம் தான்.ஆடல் தான். ஆயகலைகள் அறுபத்து நான்கில் […]