மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 1

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

மழை தொடங்கிவிட்டது.இப்படித்தான் உள்ளும் புறமும் பொழிந்து கொண்டிருந்த இதே நாளில் (ஜூன் 18) பதினோரு வருடங்கள் முன்பு மும்பை வந்து சேர்ந்தோம். 1985 இல் இருந்து 2011 வரை கிட்டத்தட்ட 26 வருடங்கள் டெல்லியில் இருந்து விட்டு மும்பைக்கு கிளம்பும் போது மெல்லிய தயக்கம் இருந்தது. புதிய மொழி, புதிய சூழல், புதிய கலாச்சாரம்… தாக்குபிடிக்க முடியுமா என்கிற பயம் இருந்தது ஆனால் கொஞ்ச நாட்களிலேயே எல்லாம் சகஜமாகிவிட்டது போலத் தோன்றியது பணியில் சந்தித்த முதல் குழப்பம் […]

மும்பை நினைவுகள் – 3

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு வீடும் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கும். ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் மக்கள் தனிப் பேருந்து ஏற்பாடு செய்துகொண்டு சொந்த ஊருக்குப் போவார்கள். கிராமத்தில் இருக்கும் தங்கள் பாரம்பரிய வீட்டை வெள்ளையடித்து, சுத்தம் செய்து கணபதியை அமரவைத்து பூஜைகள் செய்து ஆடிப்பாடி கொண்டாடி அலுத்துக் களைத்து சந்தோஷமாக, அடுத்த வருடம் […]

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 2

This entry is part 2 of 9 in the series மும்பை நினைவுகள்

மராட்டியர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும் முக்கிய பண்டிகை கணேஷா. அதாவது விநாயகர் சதுர்த்தியை தான் இப்படி அழைக்கிறார்கள். எல்லா மதத்தினரும் எல்லா பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். விநாயகர் மும்பையின் காவல் தெய்வம் . மும்பைச்சா ராஜா .அது மட்டுமல்ல, அவர் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் ராஜா. மாஹிம்ச்சா ராஜா,அந்தேரிச்சா ராஜா லால்பாக்ச்சா ராஜா இப்படி பல பெயர் இவருக்கு. இவர்களில் ரொம்ப பணக்காரர் லால்பாக்ச்சா ராஜா. வரிசையில் நின்று […]

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 4

This entry is part 2 of 9 in the series மும்பை நினைவுகள்

கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா என்கிற பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். இந்த டோல் தாஷா பொதுவாக மூன்று வகைப்படும் . புணேரி டோல் – நகர்ப்புற இசை வடிவம். இதில் 5 அடிப்படை வகைகளில் விரல்களை உபயோகப்படுத்துவார்கள். இருபுறமும் தோலால் மூடப்பட்ட பெரிய பெரிய டோல்கள். அடுத்தது நாசிக்கீ டோல் . இது ஃப்ரீஸ்டைல் […]

மும்பை நினைவுகள்,தஹி ஹண்டி

மும்பை நினைவுகள் – 5

This entry is part 3 of 9 in the series மும்பை நினைவுகள்

விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது சின்ன ஊர்களில் கூட “தஹி ஹண்டி” எனப்படும் நம்ம ஊர் உறியடி, ஹோலி கோலாகலங்கள்,தசரா, மராட்டி புது வருஷம் ஆன “குடி படுவா” போன்ற எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மராட்டி மொழி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. மராட்டி சானலில் செய்திகள், சீரியல்கள், படங்கள் பார்த்ததின் மூலம் மொழி முழுமையாக வசப் படாவிட்டாலும், மராட்டியில் பேசினால் ஹிந்தியில் பதில் சொல்லி சமாளிக்கிற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. நம்ம பக்கம் சென்னை, மதுரை, […]

மும்பை நினைவுகள் – 6

This entry is part 6 of 9 in the series மும்பை நினைவுகள்

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே – புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் – பூனை குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி பல. மராட்டியர்களின் சாப்பாட்டு ராமர்களும் உண்டு. அதற்கேற்றார்போல அவர்களது பெயர்களும் அமையும்.தஹி ஃபலே – தயிர் வடை பிரியர்; பாஜி ஃபலே – காய்கறி பிரியர்; கோப்ரே – கொப்பரை மற்றும் உலர்பழ பிரியர் […]

மும்பை நினைவுகள் – 7

This entry is part 7 of 9 in the series மும்பை நினைவுகள்

போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில இடங்களில் வேறுபட்டும், சில இடங்களில் ஒன்றுபடும் இருக்கின்றன. இந்தியா முழுவதும் பெரும்பாலும் மணமகள் சிவப்பு நிற ஆடை அணந்தால், மகாராஷ்டிர மணப்பெண், ஆரஞ்சு அல்லது மாம்பழ நிற புடவை அணிகிறாள். அது ஆறு கஜமாகவோ அல்லது நவ்வாரி எனப்படும் ஒன்பது கஜமாகவோ […]

மும்பை நினைவுகள் – 8

This entry is part 8 of 9 in the series மும்பை நினைவுகள்

சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு தேவையான தின்பண்டங்கள் போன்றவற்றை தயார் செய்கிறார்கள். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. அப்படி எதுவும் நடப்பதில்லை. சிம்பாலிக்காக, ஒரு சிறிய மேடையில் சில பொருட்களை காட்சிப்படுத்துகிறார்கள். சீமந்த் பூஜா மணமகன் தன் வீட்டாருடன் திருமண மண்டபத்திற்கு நுழையும் முன், மணமகளின் பெற்றோர், […]

மும்பை நினைவுகள் – 9

This entry is part 9 of 9 in the series மும்பை நினைவுகள்

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் செலவை ஆரம்பிக்கிறார்கள். ஒரு நோட்டுப் போட்டு எல்லா செலவுகளையும் குறித்து வைக்கிறார்கள் பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் செலவைப் பாதி பாதியாக பகிர்ந்து கொள்கிறார்கள். உறவினர்களை அழைப்பதும் அப்படியே. இருபக்கத்திலும் சம எண்ணிக்கையில் உறவினர்கள் வருகிறார்கள். அனாவசியமான டாம்பீகம் இல்லை. கூட்டம் […]