அடுத்து இரண்டு தர்பைகளால் செய்த பவித்ரத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தொட்டு ப்ரோக்ஷண பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கும் அக்னிக்கும் நடுவே எட்டு தர்பங்களை வடக்கு நுனியாக போட்டு, அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். இதில் சிறிது அட்சதையும் நீரும் சேர்க்க வேண்டும். இந்த பவித்திரத்தை வடக்கு நுனியாக பிடித்துக் கொண்டு வலது கையால் மறுமுனையில் பிடித்துக்கொண்டு இதைத் தண்ணீரில் முக்கி, கிழக்கு பக்கமாக மூன்று முறை தள்ள வேண்டும். இது தண்ணீரை சுத்திகரிக்கும் கர்மாவாகும். பிறகு எல்லா பாத்திரங்களையும் நிமிர்த்த வேண்டும். சமித்துகளின் கட்டை அவிழ்க்க வேண்டும். பிறகு இந்தத் தண்ணீரால் எல்லா பாத்திரங்களையும் மூன்று முறை புரோக்ஷணம் செய்ய வேண்டும். பின்னர் இந்த பாத்திரத்தை தெற்கே வைக்க வேண்டும். கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.