அழியாத மனக்கோலங்கள் – 6
சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன. ஈ காக்காய் இல்லை. ஹோவென்றிருந்தது. கொஞ்ச தூரம் போனதும், "சைக்கிள்லே ஏறி மிதிடா.." என்றான்.ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான். இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது. ...