தேவ் ப்ரயாக்

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1

This entry is part 1 of 4 in the series கங்கை உருவாகிறாள்

வருடத்தில் பாதிக்கு மேல், அதாவது குளிர் காலத்தில் (தீபாவளிக்கு அடுத்த நாள் பத்ரிநாத் கோயில் மூடப்பட்டு அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். இங்கே அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி கோவில் திறப்பதை கப்பாட் திறந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த வருடம் கோவில் மீண்டும் தரிசனத்திற்காக திறந்தார்கள் என்பதால் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஹரித்வார் நகரிலிருந்து பத்ரிநாத் கோயில் வரை செல்ல சாலை வசதி உண்டு. தொலைவு சற்றேறக்குறைய 320 கிலோ மீட்டர். ஹரித்வார் நகரின் பேருந்து நிலையத்தின் வாயிலுக்கு வெளியே பேருந்துகள் கிடைக்கும். இந்த பேருந்துகள் அனைத்துமே தனியார் வாகனங்கள் தான். TGMOC LTD (Tehri Garhwal Motors Owners Corporation Limited என்கிற கூட்டமைப்பு தான் இந்த பேருந்துகளை இயக்குகிறது. காலை வேளையில் முடிந்தவரை பத்ரிநாத் வரை செல்லும் பயணிகளை மட்டுமே பேருந்தில் ஏற்றிக் கொள்கிறார்கள்