அழியாத மனக்கோலங்கள் – 11

This entry is part 11 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

கொஞ்ச நேரத்தில் என்னைக் கூப்பிடுவதாக ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு அறைக்குள் போகச் சொன்னார். அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு. அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னேன். அந்த அதிகாரி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.