இந்தியாவில் Tiktok தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் அது தடைசெய்யப்படும் என்று வந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அமெரிக்க அதிபர் திரு ட்ரம்ப் Tiktok தடை செய்யவே விரும்பினார். ஆனால் அவரது கட்சியிலேயே அதற்கு எதிர்ப்பு எழும்பியது. மேலும் இந்த வருட இறுதியில் தேர்தல் வரவிருப்பதால் 100 மில்லியன் Tiktok உபயோகிப்பாளர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை. இதே நேரத்தில் தான் Tiktok & Microsoft பற்றிய செய்தி வெளிவராத துவங்கியது. ஆனால் இந்த வியாபார ஒப்பந்தங்கள் எப்பொழுதும் சில நாட்களில் முடிவு பெரும் விஷயம் இல்லை ஆதலால் இது பல மாதம் இழுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டால் அந்த செயலியை உருவாக்கிய bytedance நிறுவனத்திற்கு பலத்த நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கமிட்டி Tiktok & Microsoft நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 15 தேதிக்குள் இந்த வியாபார ஒப்பந்தத்தை பேசி முடிக்குமாறு கூறியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நாதெல்லா ட்ரம்ப்புடன் பேசியதை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் Tiktok கைமாறினால் சோஷியல் மீடியாவில் மைக்ரோசாப்ட்டின் நுழைவை அது அறிவிக்கும். இது வரை (linkedin தவிர்த்து) சோஷியல் மீடியா செயலிகளில் மைக்ரோசாப்ட் நுழையவில்லை. இது அந்த கம்பெனிக்கு ஒரு லாபமாக இருந்தாலும், இது வரை டேட்டா பிரைவசி பிரச்சனைகளில் மைக்ரோசாப்ட் பெரிதாக மாட்டவில்லை. ஆனால் இதில் நுழைந்த பின் கண்டிப்பாக மாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ சீனாவின் ஆதிக்கம் குறைந்தால் நல்லது !!!