Zoho Doc Scanner – Introduction

சமீபத்தில் cam Scanner உட்பட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது அனைவருக்கும் தெரியும். அதற்கு மாற்றாக பல்வேறு இந்திய செயலிகள் உள்ளன. ஆனால் பலரும் வெளிநாட்டு செயலிகளை உபயோகப்படுத்துகின்றனர். ஏற்கனவே கம்பெனி மெயில்களுக்கு ஜிமெயிலுக்கு மாற்றாக zoho மெயில் பற்றி எழுதி இருந்தேன். அந்த வரிசையில் இன்று Zoho Doc Scanner.

Zoho Doc Scanner வசதிகள்

இப்பொழுதைக்கு முதல் வருடம் முற்றிலும் இலவசம் என்று செயலி சொல்கிறது. மற்ற செயலிகள் போல் இதில் ஸ்கேன் செய்து அதை உடனடியாக ஈமெயில் அனுப்புவது அல்லது க்ளவுட் ஸ்டோரேஜில் சேமிப்பது போன்றவற்றை செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஸ்கேன் செய்த டாக்குமெண்டை மொழிபெயர்ப்பும் செய்து கொள்ளலாம். இது முக்கியமான ஒரு வசதியாக தோன்றுகிறது ( நான் சோதிக்கவில்லை)

அதே போல் Zoho அக்கவுண்ட் இருக்கும் பட்சத்தில் டிஜிட்டல் கையெழுத்தை உருவாக்கி அதை டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளலாம். சில விஷயங்களை டெம்பிளேட் ஆக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் மாற்ற தேவை இல்லை. குறிப்பாய் ஸ்கேன் செய்யப்படும் டாக்குமெண்ட் பெயர் எந்த பார்மேட்டில் இருக்க வேண்டும். ஈமெயில் அட்டாச்மெண்ட் அனுப்பினால் என்ன டேகிங் பண்ண வேண்டும் என்று டீபால்ட்டாக செட் செய்து கொள்ளலாம்.

ஒரு உதாரணத்திற்கு நான் ஸ்கேன் செய்தது. ஸ்கேன் செய்தவுடன் அது எந்த மாதிரி கலர் ஸ்கீமில் வரவேண்டும் என்றும் கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்காக தனியாக கேலரி சென்றோ இல்லை வேறு போட்டோ எடிட்டர் செயலியோ செல்லத் தேவை இல்லை. அதே போன்று ஸ்கேன் செய்த டாக்குமெண்டை பிடிஎப் அல்லது JPEG வடிவத்தில் ஈமெயில் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பெற play store இல் Zoho Doc scanner என தேடவும் அல்லது இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

About Author