அக்டோபர் 19 ராசிபலன்
மேஷம்
அக்டோபர் 19 ராசிபலன்
ஐப்பசி 03 – திங்கள்
மூத்த உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பணிபுரியும் இடங்களில் மற்றவர்களின் பணிகளையும் கூடுதலாக பார்க்க நேரிடும். தொழில் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : சாதகமற்ற நாள்.
ரிஷபம்
அக்டோபர் 19 ராசிபலன்
ஐப்பசி 03 – திங்கள்
செய்யும் பணியில் செல்வாக்கு உயரும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். பொதுநலத்திற்காக நன்கொடைகள் அளித்து மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிஷம் : நட்பு உண்டாகும்.
மிதுனம்
அக்டோபர் 19 ராசிபலன்
ஐப்பசி 03 – திங்கள்
நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கு இடையே விரிசல்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : எச்சரிக்கை வேண்டும்.
கடகம்
அக்டோபர் 19 ராசிபலன்
ஐப்பசி 03 – திங்கள்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தீர்வு காண்பீர்கள்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
சிம்மம்
அக்டோபர் 19 ராசிபலன்
ஐப்பசி 03 – திங்கள்
நீண்ட நாட்கள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனை விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : சிக்கல்கள் குறையும்.
உத்திரம் : கவலைகள் மேலோங்கும்.
கன்னி
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இடர்பாடுகள் தோன்றி மறையும். தூரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : இடர்பாடுகள் மறையும்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
துலாம்
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
திருமண வரன்கள் கைகூடும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவினால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சுபவிரயங்கள் உண்டாகும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
விருச்சகம்
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். எடுத்துரைக்கின்ற பேச்சுக்களின் மூலம் இலாபம் உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனங்களின் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.
தனுசு
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : நட்பு வட்டம் அதிகரிக்கும்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : உறவுகள் மேம்படும்.
மகரம்
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
தொழில் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூகச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் ஏற்படும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
மீனம்
அக்டோபர் 19, 2020
ஐப்பசி 03 – திங்கள்
தந்தைவழி உறவுகளால் சாதகமான சூழல் அமையும். தலைமை பதவியில் உள்ள அதிகாரிகளின் ஆதரவுகளால் மேன்மை உண்டாகும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.