இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

மேஷம்

ஆவணி 09 – செவ்வாய்

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : நிதானம் வேண்டும்.
பரணி : கவனம் தேவை.

கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.

🕉️ரிஷபம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

ஆவணி 09 – செவ்வாய்

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மேன்மைக்கான உதவிகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.

மிருகசீரிஷம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

🕉️மிதுனம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

ஆவணி 09 – செவ்வாய்

கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

🕉️கடகம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

ஆவணி 09 – செவ்வாய்

வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பூசம் : ஆசைகள் நிறைவேறும்.

ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

🕉️சிம்மம்

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

ஆவணி 09 – செவ்வாய்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதுவிதமான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் உத்வேகத்துடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : சிந்தனைகள் தோன்றும்.
பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

🕉️கன்னி

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25

ஆவணி 09 – செவ்வாய்

மனை தொடர்பாக எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சில கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

🕉️துலாம்

ஆகஸ்ட் 25, 2020

ஆவணி 09 – செவ்வாய்

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும். உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.

விசாகம் : அனுகூலமான நாள்.

🕉️விருச்சகம்

ஆகஸ்ட் 25, 2020

ஆவணி 09 – செவ்வாய்

வணிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எண்ணிய செயல்களுக்கு செயல்வடிவம் கொடுத்து மகிழ்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். தற்பெருமை பேசுவதை குறைத்து கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : சிந்தனைகள் தோன்றும்.

🕉️தனுசு

ஆகஸ்ட் 25, 2020

ஆவணி 09 – செவ்வாய்

நண்பர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் கருத்து வேறுபாடுகள் மறைந்து சுபிட்சம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதலும், புதுவிதமான கண்ணோட்டமும் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : சுபிட்சம் உண்டாகும்.
பூராடம் : புரிதல் ஏற்படும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

🕉️மகரம்

ஆகஸ்ட் 25, 2020

ஆவணி 09 – செவ்வாய்

உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : காலதாமதம் ஏற்படும்.

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

🕉️கும்பம்

ஆகஸ்ட் 25, 2020


ஆவணி 09 – செவ்வாய்

மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். சுயதொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் உதவிகள் பற்றிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 25, 2020
ஆவணி 09 – செவ்வாய்

இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மூலம் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தம்பதியர்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாமியாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : இழுபறிகள் நீங்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : ஒற்றுமை மேம்படும்.

சம்பத் குமார்

About Author