ஜூன் 22 ஆனி 08 ராசி பலன்
🗓️22-06-2021⏳
🔴செவ்வாய்கிழமை🌸
🕉️மேஷம்
ஜூன் 22, 2021
உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நன்மையளிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது சேமிப்பை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : உபாதைகள் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : செலவுகளை குறைக்கவும்.
🕉️ரிஷபம்
ஜூன் 22, 2021
நண்பர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விவகாரங்களில் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
🕉️மிதுனம்
ஜூன் 22, 2021
இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் அனுப்பின சூழ்நிலைகள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்கரமான வாய்ப்புகளின் மூலம் லாபம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : இழுபறிகள் நீங்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
🕉️கடகம்
ஜூன் 22, 2021
மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூசம் : மாற்றமான நாள்.
ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
🕉️சிம்மம்
ஜூன் 22, 2021
நெருக்கமானவர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
🕉️கன்னி
ஜூன் 22, 2021
செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
🕉️துலாம்
ஜூன் 22, 2021
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். வேகத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நன்மையளிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவமும், தைரியமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : விவேகம் வேண்டும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️விருச்சிகம்
ஜூன் 22, 2021
வழக்குகள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.
🕉️தனுசு
ஜூன் 22, 2021
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️மகரம்
ஜூன் 22, 2021
நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதுவிதமான மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் குடும்ப நபர்களின் உதவிகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவோணம் : புரிதல் ஏற்படும்.
அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
🕉️கும்பம்
ஜூன் 22, 2021
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில இடமாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
🕉️மீனம்
ஜூன் 22, 2021
தந்தையின் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்துக்கொள்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரேவதி : நம்பிக்கை மேம்படும்.