நட்சத்திர பொது குணங்கள் பூரம்

நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று பூரம்


இதமான வசனம் உளான் கல்விமான்
சிவந்திருக்கும் இருகண் ணாளன்
நிதியதனை வருத்த மதாய்த்தே டிடுவான்
வருங்கருமம் நினைவில் காண்பன்
விதமான வியாபாரி கடின மொழி
பலநினைவை விரும்பு நெஞ்சன்
பொதுமார் தனை வெல்வன் நகைதந்த‌
அழகன் பூரத்தினானே


பூரம் நட்சத்திரத்தாரின் பொது இயல்புகள்

இனிமையான பேச்சு இருக்கும்.
கல்வியாளர்களாக இருப்பர்.

கண்கள் சிவப்பாக இருக்கும்.

உழைத்துப் பொருள் தேடுவதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து செயல் செய்கின்றவர்கள்.

எந்த வகை வியாபாரத்தினையும் உடனே தெரிந்து கொண்டு செயல்படுத்தும் திறமை கொண்டவர்கள்.

இனிமை என்றாலும் பேச்சு கராறாக இருக்கும்..

பல சிந்தனைகளை ஒரே நேரத்தில் கொண்டிருப்பார்கள்.

பற்கள் அழகானவர்கள்.

இவர்கள் விலைமாதர் தொடர்பினை விரும்புவர் என்பதும் அந்தப் பாடலில் ஒரு வரி..

பூர நட்சத்திரத்தவர்கள் நாட்டிய சாஸ்த்திரம் அறிந்திருப்பார்கள் என்றும் காரிய விசாரம்
( ஒரு வேலை எனில் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தல்) செய்பவர்கள் என்றும் யவன ஜோதிஷம் நூலில் இரண்டு வரி இருக்கு


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம்

About Author