இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று கேட்டை நட்சத்திரம்
தாட்டிகன் துட்டரிணக் கன்பொய்யன்தருபுத்தி யுளரிவான் குரூர
கோபிநாட்டிய உள்மூச்சுளன்நீ ராடிடவும் பிரியன்நற்புத்தி உளன்
நெடியன் தமையனாரைரட்சிப்பான்வாட்டமிலாச் சிற்றுண்டிதின்
பன்மன்னார்க்கு இனியன்மயிர்கடையும் விழிசிவப்பும் வலப்பாக
மறுவன்கேட்ட மொழி திறங்கொள்ளான் பொய்மை
மெய்யாக்கிடுவான்கேள்வியுளன் கடினச்சொலான் கேட்டையானே
1. வலிமையுள்ளவர்கள்
2. மூர்க்க குணம் கொண்டவர்களை நண்பர்களாக அடைவார்கள்
3. மிகைப்படுத்திப் பேசும் தன்மை உள்ளவர்கள்
4, கோபம் உள்ளவர்கள்
5. மூச்சு வாங்கும் போது அதை அடக்கத் தெரிந்தவர்கள். உள்சுவாசம் உண்டு
6. தனக்கு மூத்தவராகப் பிறந்தவர்களிடம் மரியாதை கொண்டவர்கள்
7. சிறு திண்பண்டங்கள் கொறிப்பதில் ஆர்வம் இருக்கும்
8. கேசம் அடர்த்தியாக இருக்கும்
9. விழிகள் பெரியவை சிவப்பானவை
10 உடலில் வலது பாகத்தில் மறு இருக்கும்
11. பிறர் சொல்வதை அப்படியே நம்ப மாட்டார்கள் நிறைய கேள்வி கேட்டுத் துளைப்பார்கள்
12 இவர்கள் பொய் பேசினால் கண்டுபிடிப்பது கடினம . மெய் போலவே பேசத் தெரிந்தவர்கள்
13, கொஞ்சம் கட் அண்ட் ரைட் ரகம்
ஆசாமிகள்
9840656627
இதற்கு முந்தைய நட்சத்திரம் அனுஷம்