பத்துப் பொருத்தங்கள்

பத்துப் பொருத்தங்கள் பற்றிய ஒரு விளக்கம்

பத்துப் பொருத்தங்கள் என்னென்ன?

தினம், கணம், மஹேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை இவை பத்துப் பொருத்தங்கள் (நாடி, விருக்ஷம் இதையும் சேர்த்து 12 பொருத்தங்கள்)

  1. தினப்பொருத்தம்: மனம் ஒத்து போவது, அதிர்ஷ்டமான வாழ்க்கையை குறிப்பது – இந்த பொருத்தங்கள் இருந்தால் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும்
  1. கண பொருத்தம் : இருவரும் ஒரே கணமாக அல்லது வேதகணம் மனித கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு – இது ஐஸ்வர்யத்தையும் தாம்பத்யத்தில் ஒரு மகிழ்வையும் தரக்கூடியது
  1. மஹேந்திர பொருத்தம் : பற்று நல்ல ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் இவற்றை குறிப்பது கணவன் மனைவிக்குள் ஒரு ஒற்றுமை புரிந்துகொள்ளல் இவற்றை சொல்கிறது. இது இல்லை எனில் குடும்ப உறவுகளில் விரிசல் வரும்
  1. ஸ்த்ரீ தீர்க்கம் : பொது நலம், மாங்கல்ய பலம், குடும்ப உறவுகளின் நெருக்கம் இவற்றை சொல்வது பெண் நக்ஷத்திரம் முதல் எண்ண 13 அல்லது அதற்கு மேல் இருந்தால் இந்த பொருத்தம் உண்டு. குறைந்தால் ஒரு பிடிமானம் இல்லாத மகிழ்ச்சியற்ற வாழ்வு இருக்கும்
  1. யோனி பொருத்தம் : பாலியல் கணவன் மனைவி சேர்க்கையை சொல்வது. இருவருக்கும் ஒரே யோனி அல்லது நட்பு யோனி இருந்தால் கலவியில் தாம்பத்யத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.
  1. ராசி பொருத்தம் : வம்ஸ விருத்தி, குடும்ப வளர்ச்சியை கொடுப்பது, இரண்டு பேரின் ராசிகளும் நட்பாக இருந்தால் அதிக குழந்தைகள் செல்வம் பெயர் இவற்றை கொடுக்கும்.
  1. ராசி அதிபதி பொருத்தம் : இதுவுமே சகல ஐஸ்வர்யம் ஜீவனம் இவற்றை அதிகரிக்க செய்து குடும்ப முன்னேற்றத்தை கொடுக்கிறது இருவரது ராசி அதிபதிகளும் நட்பாக இருக்க வேண்டும்.
  1. வசியம் : கணவன் மனைவி சேர்க்கை, குழந்தை பாக்கியம் இவற்றை சொல்கிறது இருவர் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமாக இருக்க வேண்டும்.
  1. ரஜ்ஜு பொருத்தம் : இருவரது நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இருத்தல் நலம், வெளிநாடு, தொழில் முன்னேற்றம், கணவன் மனைவி ஒற்றுமை, குடும்ப முன்னேற்றம் இவற்றை சொல்கிறது.

ஒருவேளை ஒரே ரஜ்ஜுவாக இருந்தால்

சிரசு ரஜ்ஜுவானால் – கணவர் மரணம்

கண்ட ரஜ்ஜுவானால் – மனைவி மரணம்

வயறு ரஜ்ஜுவானால் – குழந்தை தோஷம்

தொடை ரஜ்ஜுவானால் – ஒற்றுமை குறைவு , வருமானம் இல்லை

பாத ரஜ்ஜுவானால் – நோய் அதிகம், வெளிதேச வாசம்

  1. வேதை பொருத்தம் : இருவரின் நக்ஷத்திரம் ஒன்றுக்கொன்று பகையில்லாமல் இருக்கவேண்டும் பகையாக இருந்தால் குழந்தை செல்வம் மற்றம் தன ப்ராப்தியை தடுக்கும்.
  1. நாடி பொருத்தம் : இருவருக்கும் தனித்தனி நாடியாகவந்தால் நலம், ஒரே நாடியானால் தம்பதிகளுக்குள் அதிக ஒற்றுமையை கொடுக்கும்.
  1. விருக்ஷ பொருத்தம் (குழந்தை செல்வம்) : விருக்ஷம் என்றால் மரம், பெண்ணும் பிள்ளையும் பாலுள்ள நக்ஷத்திரங்களானால் அதிக குழந்தை இருக்கும். அட்லீஸ்ட் பெண் மட்டும் பாலுள்ள நக்ஷத்திரமாய் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு. ஆண் பாலுள்ள நக்ஷத்திரமாய் இருந்து பெண் பாலற்ற நக்ஷத்திரமாய் இருந்தாலும் குழந்தை இல்லை.

மேற்படி பத்து பொருத்தங்களை அடியேன் ஏன் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்றால் இது அந்த காலத்தில் வீட்டுக்குவரும் மருமளை மட்டுமே கொண்டு சொல்லப்பட்டது எல்லாம் பெண் நக்ஷத்திரப்படியே அமைக்கப்பட்டது இந்த காலத்துக்கு இது ஒத்து வருவதில்லை. பெண்ணை படிக்க வைக்கிறார்கள் ஆணுக்கு பெண் சமானம் என்ற நிலைப்பாடு இருக்கிறது. அந்தகாலத்தில் தனிப்பட்ட ஜாதகங்களை பெரியதாக அலசுவதில்லை . இன்றைய அளவில் இந்த பத்துக்கு 8 பொருத்தம் இருந்தாலும் பலர் விவாகரத்தில் வந்து நிற்பதை பார்க்கிறேன் காரணம் இதே பத்து பொருத்தங்கள் இருவரின் தனிப்பட்ட ஜாதகங்களில் இருப்பதில்லை என்பதையும் பார்க்கிறேன்.

வெறும் பத்து பொருத்தங்களை மட்டும் கொண்டு முடிவு செய்யாமல் தனிப்பட்ட ஜாதகங்களில் இந்த பத்து பொருத்தங்களும் இருக்கா மற்ற விஷயங்களையும் பார்த்து முடிவு செய்யவேண்டும். இதுவே சரியான வழி என்பது அடியேன் அனுபவம்

அன்புடன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர்

D1-304, Siddharth Dhakshin Appartment

Ayyencheri Main Road, Urappakkam

Phone : 044-35584922 / W-8056207965

Email : mannargudirs1960@hotmail.com

About Author