பிப்ரவரி 11 ராசி பலன்

🕉️மேஷம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சற்று பொறுமை வேண்டும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை விட மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : தடைகள் குறையும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.


🕉️ரிஷபம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எண்ணிய செயல்களை செய்து முடிக்க கூடுதல் முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களை பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️மிதுனம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனதில் தோன்றக்கூடிய சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக்கொள்வதன் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️கடகம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். உடனிருப்பவர்களுக்கிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் சோர்வும், மனக்குழப்பமும் அகலும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️சிம்மம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

உறவினர்களிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பமான எண்ணங்கள் அகலும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் குறையும். வியாபார அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : நன்மை உண்டாகும்.
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️கன்னி
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உறவினர்கள் கூறும் கருத்துக்களுக்கு நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு குழப்பங்களும், காலதாமதமும் ஏற்படும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


🕉️துலாம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : தெளிவு கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

பிள்ளைகளுக்கு தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கி கொடுப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். திட்டமிட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : திருப்தியான நாள்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️தனுசு
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

மனதில் சோர்வின்றி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நற்பெயர்களால் கீர்த்தி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : உற்சாகமான நாள்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.


🕉️மகரம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின்போது எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.


🕉️கும்பம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதையும் தைரியமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். கேளிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : நிம்மதி உண்டாகும்.


🕉️மீனம்
பிப்ரவரி 11, 2021
தை 29 – வியாழன்

தனவரவுகள் சாதகமாக அமையும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த தேவையற்ற கவலைகள் குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.


About Author