மார்ச் 03 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் சிறப்பாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : எண்ணங்கள் நிறைவேறும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


🕉️ரிஷபம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். மனதில் அவ்வப்போது தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : உயர்வு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


🕉️மிதுனம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். தெய்வீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.
திருவாதிரை : லாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : மந்தமான நாள்.


🕉️கடகம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரிகளிடம் சாதகமான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.


🕉️சிம்மம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

வாக்குவன்மையால் லாபம் அடைவீர்கள். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் தொடர்பான முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். மனை விருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : அமைதி வேண்டும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️கன்னி
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணி புரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : அறிமுகம் ஏற்படும்.


🕉️துலாம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் கொடுக்காமல் தாமே முடிப்பது நல்லது. எதிர்காலத்திற்கு தேவையான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : செயல்திட்டங்களை வகுப்பீர்கள்.
சுவாதி : நெருக்கடிகள் அதிகரிக்கும்.
விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

கூட்டாளிகளின் உதவிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
அனுஷம் : ஒற்றுமை மேலோங்கும்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️தனுசு
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். அலைச்சல்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : புத்துணர்ச்சியான நாள்.
பூராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


🕉️மகரம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேம்படும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவோணம் : நன்மையான நாள்.
அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.


🕉️கும்பம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

பொதுநலத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தந்தைவழி சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய இடத்தை அடைவதற்கான லட்சியக் கனவுகளை உருவாக்குவீர்கள். இளைய சகோதரர்களின் உதவிகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.
சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


🕉️மீனம்
மார்ச் 03, 2021
மாசி 19 – புதன்

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வாகனங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
ரேவதி : மந்தத்தன்மை உண்டாகும்.


About Author