அக்டோபர் 15 ராசிபலன்

அக்டோபர் 15 ராசிபலன்

🕉️மேஷம்
அக்டோபர் 15 ராசிபலன்
புரட்டாசி 29 – வியாழன்

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : விழிப்புணர்வு வேண்டும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : இலாபம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 15 ராசிபலன்
புரட்டாசி 29 – வியாழன்

அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனை விற்பனையாளர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.


🕉️கடகம்
அக்டோபர் 15 ராசிபலன்
புரட்டாசி 29 – வியாழன்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் புதிய பயணமும், அனுபவ வாய்ப்புகளும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம் : உயர்வான நாள்.


🕉️சிம்மம்
அக்டோபர் 15 ராசிபலன்
புரட்டாசி 29 – வியாழன்

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். தாயின் மீது அன்பு அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நிதானத்துடன் கேட்பதன் மூலம் உங்களின் மீதான நற்பெயர்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : அன்பு அதிகரிக்கும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.


🕉️கன்னி
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நெருக்கமான நபர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


🕉️துலாம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

அகழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மலைப்பிரதேச பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீர்நிலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சக உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அனுஷம் : புத்துணர்ச்சியான நாள்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.


🕉️தனுசு
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த தொழில் தொடர்பான செயல்பாடுகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். எதிர்பாராத சில பொருட்களின் மூலம் வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : தாமதங்கள் நீங்கும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : வரவு உண்டாகும்.


🕉️மகரம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

மருத்துவ பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். மற்றவர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.


🕉️கும்பம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

தம்பதியர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், அதில் அதிக நேரத்தை செலவும் செய்வீர்கள். எதிர்பாராத சில செயல்களின் மூலம் விரயமும், மனவருத்தமும் நேரிடலாம். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
சதயம் : மனவருத்தங்கள் நேரிடலாம்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


🕉️மீனம்
அக்டோபர் 15, 2020
புரட்டாசி 29 – வியாழன்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டு மறையும். ஆடம்பரமான பொருட்களினால் நெருக்கடியான சூழ்நிலையிலும் செலவுகளும் ஏற்படலாம். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் ஆதரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : பணவரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : செலவுகள் ஏற்படலாம்.
ரேவதி : பொறுமை வேண்டும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.